Pesum Ullangal is a talking channel with mind. We wish to share our feelings and learning with you.
Sunday, 12 July 2020
Saturday, 11 July 2020
Wednesday, 27 May 2020
இதுவும் கடந்து போகும்
கவியரங்கம்.
இலங்கை வானொலி முஸ்லிம் நோன்புப் பெருநாள் கவியரங்கம் - 2020
" இதுவும் கடந்து போகும் "
கவியரங்கத் தலைமை :
சந்தக்கவி கிண்ணியா அமீர் அலி
பங்குபற்றும் கவிஞர்கள் :
எம். எஸ். அப்துல் லத்தீப்
கலாபூஷணம் மஸீதா அன்சார்
தாஹிர் நூருல் இஸ்ரா
என். நஜ்முல் ஹுசைன்
தயாரிப்பு :
முஹம்மது ரலீம்
மேற்பார்வை :
ஸனூஸ் முஹம்மத் பெரோஸ்
பொறுப்பாளர் - முஸ்லிம் சேவை
ஞாயிற்றுக்கிழமை (24/5/2020) காலை 10.20 ஒலிபரப்பப்பட்டது. திங்கட்கிழமை இரவு நிகழ்ச்சியில் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
" இதுவும் கடந்து போகும் "
கவியரங்கத் தலைமை :
சந்தக்கவி கிண்ணியா அமீர் அலி
பங்குபற்றும் கவிஞர்கள் :
எம். எஸ். அப்துல் லத்தீப்
கலாபூஷணம் மஸீதா அன்சார்
தாஹிர் நூருல் இஸ்ரா
என். நஜ்முல் ஹுசைன்
தயாரிப்பு :
முஹம்மது ரலீம்
மேற்பார்வை :
ஸனூஸ் முஹம்மத் பெரோஸ்
பொறுப்பாளர் - முஸ்லிம் சேவை
ஞாயிற்றுக்கிழமை (24/5/2020) காலை 10.20 ஒலிபரப்பப்பட்டது. திங்கட்கிழமை இரவு நிகழ்ச்சியில் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
Friday, 22 May 2020
Love lessons to the parents ❤️
அன்மையில் ஒரு தாயை சந்தித்தேன்.பல்வேறு விடயங்களை பேசினார். இடையில் அவர் சொல்ல தொடங்கினார்.
என் மகனுக்கு ஒரு காதல் தொடர்பு இருந்தது. அது எதிர்பாராத விதமாக முறிவடைந்துவிட்டது. அதனால் 3 மாதங்களாக எனது மகன் வீட்டுக்கு வரவே இல்லை. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை இருப்பதும் ஒரே ஒரு பிள்ளை.
எனக்கு அவன் ஒத்தை பிள்ளையாக இருப்பது ஒரு பிரச்சினையாக தோன்றியது. உடன் பிறப்புகள் இருந்திருந்தால் அவர்களுடன் தன் வேதனையை பகிர்ந்து கொண்டிருப்பான். என்ன செய்வதென்று தெரியவில்லை.
நாங்கள் மிக அன்பாகவும் நண்பர்களாக பழகினோம். ஒரு பெண் பிள்ளையை வீதியில் கண்டால் தனக்கு ஏற்படும் உணர்வை தன் தந்தையுடன் அவன் பகிர்ந்து கொண்டான்.
ஆனால் இப்போதெல்லாம் தந்தை இருக்கும் இடத்திலே இருக்கமால் வேறு திசையில் சென்றுவிடுவான். தந்தை ஒரு பக்கமும் தனையன் இன்னொரு பக்கம் இருக்கிறார்கள்.
என்னிடம் எப்போதும் அவனுடைய இளமை காலத்தை நான் இல்லாது செய்துவிட்டேன் என்று குறை கூறுவான்.
அவனுடைய இளமைக்காலத்தில் நாங்கள் மிகவும் வறுமையில் இருந்தோம். எங்களுக்கென்று ஒரு சொந்தவீடு இருக்கவில்லை நாங்கள் வாடகை வீட்டில் இருந்தோம். மகனை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. அவனை நான் பணி செய்யும் இடத்திலேயே வளர்ந்தேன்.
அவனுடைய உணர்வுகள் ஏதோ எனக்கு இறப்பர் போன்று இருக்கிறது. இலகுவாக எந்த உணர்வுக்கும் தன்னை இசைவாகப் படுத்திக் கொள்கிறான் இல்லை. எங்கு தொடங்குவது எங்கு முடிப்பது என்று தெரியவில்லை.
அவனுடைய முறிவடைந்த காதல் தொடர்பாக நாங்கள் எதையும் அவனுடன் கதைப்பதில்லை. இவ் வருடத்தின் ஆரம்பத்தில் மாத்திரம் நான் அதிக விடுமுறைகளை எடுத்து விட்டேன். இப்போதெல்லாம் நாம் அமைதியற்று இருக்கிறோம். சில நாட்களில் புகைத்தல் மனம் எமக்கு வருகிறது.
பிள்ளைகள் என்போர் பெற்றோருக்கு மிகவும் விருப்பமானவர்கள். அதேவேளை பொறுப்பு மிக்கவர்கள். அவர்களிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு கழிக்கிறோம். அவர்களது எதிர்கால வாழ்வு தொடர்பாக நாங்களும் இணைந்து திட்டமிடுகிறோம். அவர்களின் இன்ப துன்பங்களில் சரிபங்கு எடுக்கிறோம்.
ஆனால் சில வேளை அவர்கள் எடுக்கின்ற முடிவுகள் பிழையாக அமையும் பொழுது பெற்றோர்களிடம் தம் மனவெழுச்சியை காட்ட முற்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. இது இரண்டுக்கும் கெட்ட நிலையாக இருக்கிறது.
அழுகையும் ஆதங்கமுமாக தன் கதையை சொல்லி முடித்தார். இதில் ஒத்துணர்வு சொல்ல எனக்கு என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை.
மிக நீண்ட நேரம் அவரது உரையாடலை உன்னிப்பாகச் செவிமடுத்தேன். அவரது வார்த்தைகளை சொல்லிப் பார்த்தேன். பிறகு தான் ஒரு விடயத்தை புரிந்து கொண்டேன்.
அங்கு தந்தைக்கும் பிள்ளைக்கும் இருக்கும் ஆரோக்கியமான உறவு போன்று தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் இல்லை.
ஒரு பெண்ணோடு தன் எதிர்கால குடும்ப வாழ்வை வாழ்வதற்கு தேர்ந்தெடுத்த நம்பிக்கைக்குரியவள். எல்லாமும் ஆன அந்தப்பெண் மோசடி செய்யும் பொழுது ஒரு ஆண் பிள்ளையின் உணர்வுகளை ஒரு பெண்ணிடம் சொல்வதற்கு எத்தனிக்கும் அந்த முயற்சியில் தன் தாய் மீது ஏற்கனவே உள்ள வெறுப்பு அவனை பெற்றோர்களிடம் இருந்து தூரப்படுத்துகிறது.
தன்னுடைய வேதனையில் இன்னும் தன் பெற்றோர் வேதனை படக்கூடாது என்று பிள்ளைகள் பிழையான முடிவுகளுக்கும் தவறான பழக்கங்களுக்கு சென்று விடுகிறார்கள்.
இந்த முடிவுகளை பெற்றோரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.
சமவயது நண்பர்கள் தொடர்பாக அவரிடம் கேட்டபொழுது யாருமே அந்த அளவு நட்பாக அவனுடன் பழகவில்லை என்று குறிப்பிட்டார்.
அன்புக்குரிய பெற்றோர்களே வாசகர்களே நான் காணும் மனிதர்களிடம் நிறைய பாடங்களை நான் கற்றுக்கொள்கிறேன்.
இந்த மனிதரிடமும் நிறைய பாடங்களை நீங்கள் கற்று இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
நான் காணும் மனிதர்கள் போன்று நீங்களும் பல மனிதர்களை காண்பீர்கள். அவர்களிடம் முடியுமானவரை வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொள்வோம்.
பாடப்புத்தகங்கள் சுமந்து வராத வாழ்க்கை பாடங்களை சுமந்து வருபவர்கள் தான் தினம்தோறும் நாம் காணும் மனிதர்கள்.
மீண்டும் ஒரு உண்மை கதையோடு உங்களை சந்திக்கிறேன்.
நன்றி
நன்றி
Sunday, 3 May 2020
Monday, 27 April 2020
Level of stress
The level of stress is high among general public due to Covid-19
The level of Stress is rise as the corona virus. People The level of Stress is rise as the corona virus. People have never experienced such a large-scale challenge, and this one may affect mental and physical well-being, finances, social connections, and the health and safety of our loved ones. Isolation, changes in school https://lnkd.in/gDBg2zA and employment, and concern about our families and friends. I wish to find the level of stress among general public due to Covid-19 infection.
My research reviled that majority of people are spending their time with stress.
Tuesday, 21 April 2020
Monday, 13 April 2020
கடையில் பூத்த கவிதைகள் (Blooming poems in the groceries shop)
கடையில் பூத்த கவிதைகள்
கடையில் பூத்த கவிதைகள்
கையில் கிடைத்து மூன்று மாதம்
பையில் என் தோழனாய்
கிடைத்த இடமெல்லாம் கூடவந்தது.
நீண்டு செல்லும் அறிமுக உரைகள்,
ஈண்டு தேடி கவிதை கண்டேன்.
நான் பிறக்க முன்பே,
நீர் கவிதை அமுது குடித்தவர்.
ஒரு பக்க கவிதையாய்
சுருக்க மடலாய்,
அஞ்சலி செய்தியாய்,
அறிமுக விழிப்பாய்,
அமைந்த உம் கவிதைகள்,
கிழக்கின் கவிஞர்களிள் உம்
காத்திரமான பங்களிப்பு கண்டேன்.
அறிமுக உரைகள்,
அச்சத்தை தோற்றியது.
அடுத்த கவிதைத் தொகுப்புக்கு
எழுத யார் உள்ளார் என்று,
பக்கங்களின் என்னிக்கை
பஞ்சம் இல்லா
கவிதை கடையில்
கொட்டி கிடக்கும்
கடுகு போல
கடையில் பூத்த கவிதைகள்
கொட்டி கிடக்கிறது
உம் ஆரம்பகால கவிதைகளுக்கும்
பின் எழுதிய கவிதைகளுக்கும்
தொய்வையும் கருத்து செறிவும்
தேடுதலையும் தீவிர வாசிப்பையும்
தேர்ந்த சொற்பிரயோகமும்
சோம்பல் இன்றி
நேர சேமிப்பையும்,
கோழையின்றி எதிர்பை
கூர்முனை சொல்லடுக்கி,
வீரனாய் உன்
கவி நெஞ்சு வெடிப்பதையும்
கண்டு வியந்தேன்.
அறிமுகம் இல்லாமல்
அப்துல் அஸீஸை
வகத்தில் அழைக்க
வருந்தி நின்றேன்.
இன்று அவரின் கவிதைகள்
எனக்கு அறிமுகம் தந்துள்ளது.
அழைபேசியில் அழைப்பெடுத்து,
மறவாமல் வாழ்த்து சொன்ன
மகத்தான உதாரணக் கவி நீங்கள்.
என் தலைமையில் கவிபாடியமைக்கு
நன்றி
அன்புடன்
கவிதாயினி –தெல்தோட்டை இஸ்ரா
17/05/2017
Friday, 10 April 2020
I am Corona நான் கொரோனா
நான் கொரோனா
அன்பிற்குரியசி சிறுவர்களே ஒரு மாத காலம் வித்தியாசமான ஒரு சூழலை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
வீடுகளில் உங்கள் பெற்றோருடன் இருப்பதற்கும். பாடசாலைகள் மூடப்பட்டு இருப்பதற்கும் காரணம் நான்.
என்னுடைய பெயரை உங்கள் வாழ்நாளில் இனி மறக்கவே மாட்டீர்கள். அது நான் தான் கொரோனா. என்னை கோவிட் 19 என்றும் அழைப்பார்கள்.
என் மீது உங்களுக்கு அதிகம் கோபம் இருக்கும். நான் உங்களை தொற்றி விடுவேனோ என்ற பயம் உங்களுக்கு இருக்கும்.
WHO எனும் உலக சுகாதார ஸ்தாபனம் சொல்லும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் உங்களை நான் தொற்ற மாட்டேன்.
1 தும்மும் போது உங்கள் கைகளால் உங்கள் மூக்கை மறைத்துக் கொள்ளுங்கள்.
2. நண்பர்களுடன் விளையாடும் பொழுது ஓரளவு தள்ளி இருந்து ஆள் தொடர்பை குறைத்துக் கொள்ளுங்கள்.
3. முடியுமான வரை வெளியில் செல்வதை தவிர்த்து விடுங்கள்.
4 காய்ச்சல் அல்லது இருமல் சளி போன்ற ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உங்கள் பெற்றோருடன் கலந்துரையாடி மருத்துவ ஆலோசனைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ளுங்கள்.
நான் அவ்வளவு மோசமானவன் அல்ல. என்னைக் கண்டு நீங்கள் பயப்படத் தேவையில்லை.
சுகாதார வழிமுறைகளை
பின்பற்றும் போது நான் ஒருபோதும் உங்களை தொற்றவே மாட்டேன். உங்கள் பெற்றோருக்கும் இதனை கற்றுக் கொடுங்கள்.
தொடர்ந்தும் நீங்கள் என்னை பற்றிய தகவல்களை சம்பவங்களை பலரிடமிருந்தும், பலவழிகளிலும் கேட்டும் வருகிறீர்கள்.
சில வேளை தொலைபேசிகள் ஊடாக சமூக வலைத்தளங்களில் பார்த்தும் வருகிறீர்கள். அவற்றில் அதிகமானவை திரிபுபடுத்தப்பட்ட செய்திகளாகும்.
அதனை வாசித்து நீங்கள் பயப்படவோ, கவலையடையவோ, வீண் பீதியடையவோ தேவையில்லை.
உங்களை அறியாமலே நீங்கள் பின்வருமாறு நடந்து கொள்ள முடியும்.
தூங்குவதற்கு பிரச்சினையாக உள்ளதா?
தூங்கும்போது பயங்கரமான கனவுகள் வருகிறதா?
தனிமையில் இருப்பதற்கு பயமாக இருக்கிறதா?
உங்கல் விளையாட்டு பொருட்களை திரும்ப திரும்ப சுத்தப்படுத்துகிறீர்களா?
வழமையை விட உங்களுக்கு கோபமும் ஆத்திரமும் ஏற்படுகிறதா?
உங்களுக்கு யாருடனும் கதைப்பதற்கு சேர்வதற்கு விருப்பம் இல்லாமல் போகிறதா?
காலை கடமைகளை நிறைவேற்றுவதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?
உணவு உண்பதற்கு விருப்பமற்று காணப்படுகிறதா?
பெற்றோர்களே பாதுகாவலர்களே மேற்குறிப்பிட்ட விடயங்களை சிறுவர்களிடம் நீங்கள் அவதானிக்கலாம்.
இது அவர்களின் சாதாரண நடத்தையும் மன வளர்ச்சியையும் பாதிக்கும்
சிறுவர்களில் பெரும்பாலும் அவர்களுடைய பயம் மற்றும் நெருக்கீட்டை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் இருக்கும்.
எனவே கவலையாக வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.
அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் பின்வருமாறு உதவ முடியும்
1. நாளாந்த பழக்கங்கள் சிறுவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். இப்போது அதில் கணிசமான மாற்றம் ஏற்பட்டிருக்கும். உரிய நேரத்தில் காலையில் எழுந்திருக்க மாட்டார்கள். பகல் உணவு சாப்பிடுவதற்கு அண்மித்தே காலை உணவை சாப்பிடுவார்கள். எனவே மீளவும் பழக்கங்களை உருவாக்குங்கள். வழமையாக தூங்கும் நேரம் மற்றும் சாப்பாட்டு நேரத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒன்றாக கதைகளைக் கூறி மகிழ்ந்திருங்கள். பாடல்களைப் பாடி கழித்து இருங்கள். இதைத்தான் சிறுவர்கள் விரும்புகிறார்கள்.
2. பெற்றோர்களே பாதுகாவலர்களே நீங்கள் உடலால் மட்டுமே சிறுவர்களோடு இருக்கிறீர்கள். (Physically present mentally out) நீங்கள் என்னைப் பற்றி தேடிப் பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தைவிட உங்கள் பிள்ளையைப் பற்றி தேடிப்பாருங்கள். அவர்கள் இந் நேரத்தில் உங்களுடன் இருக்கவே விரும்புகின்றனர். அதனை அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். இதன் போது தயவு செய்து உங்கள் தொலைபேசிகளையும், நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சி பெட்டிகளையும், நீங்கள் வாசிக்கும் பத்திரிகைகள் அல்லது உங்கள் பொழுது போக்கு சாதனங்களை ஒரு பக்கமாக வைத்து விட்டு பிள்ளைகளோடு உங்கள் பொழுதை கழிக்க முயற்சி செய்யுங்கள்.
3. வீடுகளை சுற்றி இருக்கின்ற ஏனைய சிறுவர்களுடன் விளையாடுவதற்கு நீங்கள் அனுமதிக்காதது ஏன்? என்பதனை தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். சமவயது பாடசாலை நண்பர்களோடு தொலைபேசியுடன் உரையாட வாய்ப்பளியுங்கள்.
4. உங்களுடைய ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். சிறுவர்கள் பெரியவர்களிடமும் பெற்றோர்களிடமும் அவதானித்தே தம்மிடையே மனவடுவினை வெளிப்படுத்த கற்றுக் கொள்கிறார்கள். உங்கள் நடத்தையினையே அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதில் கவனமாக இருங்கள்.
5. பாடப்புத்தகங்களுடன் உங்கள் பிள்ளைகளை கட்டிப்போட்டு விடாதீர்கள். அவர்களின் சிறு பராயத்தை உங்களால் திருப்பிக் கொடுக்க முடியாது. இவ்வாறான சந்தர்ப்பங்கள் பாடப் புத்தகத்திற்கு அப்பால் பல வாழ்க்கைப் பாடங்களை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கிறது.
இது வாழ்வில் இன்னொரு தடவை எப்படி முகம் கொடுக்க வேண்டும் என்பதனை கற்றுக் கொடுக்கிறது.
என்னைப்பற்றி நானே சொல்ல வேண்டும்.
என் அறிவுரைகளை தயவு செய்து பின்பற்றுங்கள்.
நாளைய இவ்வுலகம் சிறுவர்களின் கையிலே இருக்கிறது.
இடர்காலத்துக்கு முகம்கொடுக்கும் திறனுள்ள சிறுவர்களாக இவர்கள் வளரட்டும்.
அதில் நான் எதிர்மறையாக பங்களிப்பு செய்திருக்கிறேன்.
எதிலும் ஒரு பாடம் இருக்கிறது.
இதிலும் ஒரு பாடம் இருக்கிறது.
நன்றி
நான் கொவிட்-19
Tuesday, 31 March 2020
வகுப்பறைக்கு வெளியே
இரா. தட்சனாமூர்த்தி எழுதிய வகுப்பறைக்கு வெளியே என்ற நூல் பற்றிய விமர்சனம்.
புதுவை அறிவியல் இயக்கம் book for children நான்காம் பதிப்பாய் 2018 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. நூலிற்கு அணிந்துரையினை முனைவர் பரசுராமன் வழங்கியுள்ளார். அவரது அணிந்துரையில்,
"இதுதான் ஆசிரியர்களின் கூட்டு முயற்சி சாத்தியமானால் பள்ளி மாணவர்கள் பலருடைய இடைவிலகளை தவிர்க்க முடியும். ஒருவேளை உங்களுக்கு அதிகம் சிரமம் இல்லாமலேயே அவர்களுக்கு உதவ வாய்ப்பு இருக்கக்கூடும்" என்று குறிப்பிடுகின்றார் .
இக்கதை தொகுப்பில் உள்ளடங்கியுள்ள சுமை, பாயாசம் பரமசிவம், காசு மேல காசு வந்து, வண்டிக்காரன், எனக்கு இங்கிலீஷ் வர்ல, வேலன், வகுப்பறைக்கு வெளியே ஆகிய ஏழு கதைகளுமே பல்வேறு தளங்களில் இருந்து வறுமையின் கோரப்பிடியினால் ஏற்பட்டுள்ள சுமையைப்பற்றி பேசுகின்றது.
என் உரையில் ஆசிரியர் இப்படி குறிப்பிட்டுள்ளார்
"அரசு பள்ளியில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பணியாற்றிய அனுபவத்தில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்து ஏழு தலைப்புகளில் இந்நூலில் குறிப்பிட்டுள்ளேன். சமூக சூழ்நிலையாலும் பள்ளிச் சூழலும் கல்வி முறையாலும் படிப்பை தொடர முடியாமல் போன குழந்தைகளின் உண்மைக்கதை. இந் நூலில் குறிப்பிட்டுள்ள அனைத்து நிகழ்வுகளும் உண்மையில் நடந்தவை. சிறு மாற்றம் கூட செய்யாமல் நானே ஒரு பாத்திரமாக எனது அனுபவத்தில் எழுதியுள்ளேன்". என குறிப்பிட்டுள்ளார்
இன்றைய கல்விமுறை தொடர்பான பரந்த விமர்சனத்தில் ஒன்று தான் 100 சதவீத தேர்ச்சி அல்லது பாட அடைவு.
"ஒரு மாணவனை வகுப்பில் இடையில் நிறுத்தி இருந்தால் அது எப்படி 100 சதவீத தேர்ச்சி ஆகும். முதல் வகுப்பில் சேரும் மாணவர்களில் 42 மாணவர்களே மேல்நிலைக் கல்விக்கு வருகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. மீதியுள்ள 58 பேர் என்ன ஆனார்கள்? அவர்களை பள்ளியைவிட்டு விரட்டியது யார் என் அனுபவத்தில் நான் சந்தித்த உண்மையான சம்பவங்களை இந்நூல் குறிப்பிடுகிறது". என மேலும் நூல் உருவாக்கத்திற்கான அழுத்தத்தை எடுத்துச் சொல்கிறார்.
முதலில் வருவது சுமை. எல்லா கதைக்குள்ளும் சுமைகள் நிறைய இருக்கின்றன. வகுப்பறையில் சுமைகள் உள்ள மாணவர்களை இனங் காணவும் அவர்களின் சுமைகளை கண்டறியவும் ஆசிரியர் கையாண்டுள்ள அணுகுமுறை சிறப்பாக உள்ளது.
முதல் கதையில் கட்டுரை எழுதப் பணிப்பதன் ஊடாக வகுப்பில் இறுதி பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவியின் பிரச்சினையை கண்டறிந்துள்ளார். ஆனால் அவர் குழந்தையை அணுகிய விதத்தில் எனக்கு உடன்பாடில்லை இல்லை
"என்ன செய்ற கோவேறு கழுதை"
இது ஒரு நல்லாசான் கூறிய வார்த்தைகளாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
வீட்டுக்கு வந்த கொத்தனாரை அண்ணா என்று அறிமுகப்படுத்தி பின்னர் அப்பா என்று அலைக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டிருந்தாள் அவள் அம்மா.
"எங்க அம்மாவை இன்னொரு குழந்தை பெற்றுக்கொடு என்று சொல்கிறாராம் சார் அவங்க உடம்பு தாங்காது சார்"
இந்த வேதனையில் அண்ணாவுக்கு எழுதிய கடிதம்....12 வருடங்களுக்கு பிறகு அக்காவும் தம்பியும் தாயை விட்டு பிரிகின்றனர்.
"இவ்வளவு மனச் சுமையுடன் இந்த வயதில் இவள் எப்படி படிக்கப் போகிறாளோ" என்ற வினாவும் அவருக்கு எழுந்துள்ளது.
பாயாசம் பரமசிவம் என்னும் கதையில் தனது பெயரை உணவுப்பண்டம் ஒன்றின் பெயரோடு அறிமுகப்படுத்தி, பட்ட பெயர் கொண்டு வகுப்பில் அழைக்கும் மாணவனை கண்டறிகிறார்.
மதிய வேளையில் பாயாசமும் வடையும் கொண்டுவந்து பிள்ளைக்கு ஊட்டிவிடும் தாயும் திருமண வீட்டிற்கு விருந்துபசாரத்துக்கு சென்று அமர்ந்த போது இலை விரித்து பணிவிடை செய்த தாயும் ஒருவராக இருந்தார். இறுதியில் விபத்து ஒன்றுக்கு முகம் கொடுத்து தாய் படுக்கையில் விழ, பரமசிவத்தின் பாடசாலைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.
"என்ன வேலை செய்வாய்?"
"சம்மட்டியால் கம்பி வெட்டுவேன். எடுபிடி வேலைகள் எல்லாம் செய்வேன்"
"அவனுக்கு 12 வயது. அது சம்மட்டி தூக்கும் வயதும் இல்லை, உடம்பும் இல்லை. புத்தக சுமை குறைந்து போனது ஆனால் சம்மட்டி சுமை ஏறிவிட்டது. வருகைப்பதிவேட்டில் இடைநிறுத்தம் என்று சிவப்பு மையால் எழுதிவிட்டேன்" என முடிக்கிறார்.
தொடர்ந்துவரும் காசு மேல காசு வந்து எனும் கதையில் சுற்றுலாவிற்கு தயாராகும் பிள்ளைகளையும், அதன்போது செலவு செய்யும் மாணவனையும், அவனுடைய வருமானத்தின் பின்னணியையும், இறுதியில் புதிதாக வெளிவரும்
திரைப்படங்களின் டிக்கட்டுகளை திருட்டால் விற்று பணம் உழைக்கும் ஒருவனாக மாறிவிடுகிறான். அவன் அன்று அவருக்கு 4 டிக்கட்டுகளை இலவசமாக கொடுத்து விடுகிறான். படம் முழுவதும் அவருக்கு குற்ற உணர்வில் கழிகிறது.
திரைப்படங்களின் டிக்கட்டுகளை திருட்டால் விற்று பணம் உழைக்கும் ஒருவனாக மாறிவிடுகிறான். அவன் அன்று அவருக்கு 4 டிக்கட்டுகளை இலவசமாக கொடுத்து விடுகிறான். படம் முழுவதும் அவருக்கு குற்ற உணர்வில் கழிகிறது.
வண்டிக்காரன் கதையில் ஆசிரியர்களுக்கு உதவி செய்யும், எடுபுடி மாணவனாக அடையாளம் கண்டு அது தொடர்பாக ஆசிரியருடன் நடத்தும் உரையாடல், பின்னர் தாமதித்து பாடசாலைக்கு சமூகம் தருதல், காரணத்தைக் கண்டு பிடித்ததில் தந்தையுடன் ஒத்தாசையாக வேலை செய்வதனால் உரிய நேரத்தில் பாடசாலைக்கு வரமுடியவில்லை. இறுதியில் தந்தை விபத்துக்குள்ளாக, குடும்ப சுமைதாங்கியாக மாறிவிடுகின்றான். ஒருநாள் மண் அகழ்விற்கு எதிரான போராட்டத்தில் தலைமைதாங்கி குரல் எழுப்புவதனையும் அழகாக விவரித்துள்ளார்.
எனக்கு இங்கிலீஷ் வர்ல எனும் கதையில் ஆசிரியர்களுக்கிடையிலான உரையாடல் இடம்பெறுகிறது. புத்தக அறிமுகத்தில் குறிப்பிடுவதுபோல இக்கதை முழுதுமாக நூறு வீத அடைவு தொடர்பாகவே செல்கிறது. இ
இக் கதையை வாசிக்கும் பொழுது எனக்கும் பாடசாலையில் இருந்து வெளியேறும் வரை இங்கிலீஷ் வர்ல. சாதாரணதரம் உயர்தரம் ஆகிய இரண்டு நிலைகளிலும் முதல் தடவை நான் ஆங்கில பாடத்தில் சித்தி அடையவில்லை. எனது பள்ளிக்கால த்தில் ஆங்கிலம் கற்பதற்கு எடுத்த முயற்சிகளின் அனுபவங்களை இக்கதை சிறப்பாகவே மீட்டிப் பார்க்கச் செய்தது.
இக் கதைத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை வேலன் ஆகும். வறுமை, ஆட்டுக்குட்டி, சிறுவர் தொழிலாளி, பாடசாலை வாழ்க்கை, என்ற நிலைகளில் நின்று கதைச் சொல்லப்படுகின்றது. குடிகார தந்தைக்கும் தாய்க்கும் இடையே தொடர்ந்து நடக்கின்ற சண்டை, தாய் வாங்கிக்கொடுத்த ஆட்டுக்குட்டி அதன் பெயரே வேலன், அதற்கு கழுத்தில் கட்டிய மணி, அதனோடு பேசும் வார்த்தைகள், புத்தகப்பையை வைத்ததும் ஆட்டுக்குட்டி துள்ளி ஓடி வந்து அவளோடு விளையாடுவது, இதையெல்லாம் வறுமை காவுக்கொண்டு செல்வந்தர் வீட்டுப் பணிப் பெண்ணாக மாற்றிவிடுகிறது. படித்த பெற்றோர்களாகிய அவர்கள் (தொழில் வழங்குனர்) அவளை பாடசாலைக்கும் அனுப்பி மாதத்திற்கு 500 ரூபா சேமிப்பு செய்து கவனித்து வருகின்றார்கள்.
அன்று சமைப்பதற்காக ஆட்டிறைச்சி வாங்க சென்றபோது, மரகுற்றியின்மேல் வெட்டப்பட்ட தலையும், அதில் தொங்கும் மணியும், அது தனது வேலன் என்பதனையும், இரவு உணவிற்காக ஆட்டிறைச்சி கறியை பரிமாற வேண்டும் என்ற பெரும் துயரில் வகுப்பறையில் அன்று முழுதும் அழுது தீர்த்த பெண் குழந்தையின் உணர்வினை துள்ளியமாக வெளிக்கொண்டு வந்துள்ளார்.
புகை மூட்டத்தின் பின்னால் எனும் நூலில் ஆட்டுக்குட்டியுடன் சிறுபிள்ளைகள் எவ்வாறு இயல்பாக இணைந்து விடுகிறார்கள் என்பதுவும் வைக்கம் மு பசீர் எழுதியுள்ள ஒரு கதையும் இருப்பதாக நான் வாசித்திருக்கிறேன்
இவையெல்லாவற்றையும் இவ்வேலன் கதை ஊடுருவிச் சென்றுள்ளது.
இங்கு ஒரு விடயத்தை குறிப்பிடல் வேண்டும். எல்லா கதைகளுமே தென்னிந்திய மண்ணில் பல்வேறு இடங்களில் இடம் பெற்றதாக அமைகின்றது. புதுவை பகுதியை மையமாகக்கொண்டு அமைந்திருக்கிறது. இது ஒன்றும் எனக்கு புதிதல்ல.புற்றுநோய் சிறுவர்களைத் தேடி எல்லா பகுதிகளுக்கும் நான் ஐந்து வருடங்களாக பயணித்திருக்கிறேன்.அதன் அடிப்படையில் கதை சொல்லும் இடங்கள் தொடர்பான மனக்காட்சி எனக்கு தெளிவாகவே தெரிகிறது.
இறுதியாக புத்தகத்தின் தலைப்பை தாங்கி வந்திருக்கும் வகுப்பறைக்கு வெளியே என்ற கதை இடம் பெற்றுள்ளது.
திவ்யா என்ற பாத்திரத்துடன் அறிமுகமாகும் இக்கதையில், தாய்க்கும் தந்தைக்கும் இடையிலான விரிசல், டீசி வாங்க வரும் தந்தை, அக்கா ஒரு இடத்திலும் தம்பி இன்னொரு இடத்திலும் வாழும் நிலை, இறுதியில் ஆசிரியரைத் தேடி வரும் அத்தையும் மகளும், அவர் இடமாற்றம் பெற்றுச் சென்றதனால் கல்வி இடை நிறுத்தப்பட, தற்போது அத்தையுடன் பூக்கடையில் இருக்கிறாள் திவ்யா.
இறுதியாக பூக்கடை யில் ஆசிரியரை இனங்கண்டு கொண்ட திவ்யா ஆசிரியரின் மனைவியுடன்
"சார் எங்க சார்"
என்று குறிப்பிடுவதும்
"வந்து பார்க்கிறேன் திவ்யா". என்று ஆசிரியர் விடைபெறுவதும் இடம்பெற்றுள்ளது.
"சார் எங்க சார்"
என்று குறிப்பிடுவதும்
"வந்து பார்க்கிறேன் திவ்யா". என்று ஆசிரியர் விடைபெறுவதும் இடம்பெற்றுள்ளது.
கோவிட் 19 விடுமுறை வாசிப்பாக இணைந்துகொண்ட இப்புத்தகம். இரு தினங்களாக காய்ச்சலில் இருந்த என் மகளுடன் கூடவே பயணப்பட்ட கதைகள்.
பெற்றோரும் கல்விச் சமூகமும் வாசிக்கவேண்டிய நல்லதொரு புத்தகம்.
உண்மை கதைகளின் தொகுப்பாக அனுபவப் பகிர்வாக இது அமைந்துள்ளது.
மிகக்குறுகிய காலத்திற்குள் வாசித்து முடிக்க கூடிய சுவாரசியமான புத்தகம்.
புத்தகத்தின் பல கதைகளின் இறுதியில் பல்வேறு விடயங்களை வாசகர்களின் விவாதத்திற்கு விட்டு வைத்துள்ளார்.
உண்மையில் சுய ஊக்கப்படுத்தல் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமும் வளரவேண்டிய, விருத்தி செய்யப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.
அதன்போது இலக்கை நோக்கி போராடக்கூடிய சத்தியும் உரிய காலப்பகுதியில் உரிய அடைவுகளை எய்தக்கூடிய வழியும், வாய்ப்பும் கிடைக்கின்றது.
ஆசிரியர் குறிப்பிடுவது போல நாம் ஒவ்வொருவரும் எமது நிலையில் நின்று வாசித்து சிந்திக்க வேண்டிய ஒரு கருவூலமாக இப்புத்தகத்தை நான் அடையாளப்படுத்த முடியும். இதற்குக் காரணம் புத்தகத்தின் ஆசிரியர் ஓர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஆவார்.
முனைவர் தா பரசுராமன் குறிப்பிடுவதுபோல,
"மாணவர்கள் படிக்காமல் போனதற்கு குடும்பமே காரணம். குடும்பத்துக்கு பின்னால் சமூகமும், பள்ளிக்கு பின்னால் அரசும் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்".
மொத்தத்தில் யார் காரணம் என்பதனைவிட நானே காரணம் என்று ஏற்றுக்கொண்டு முன்னோக்கி செல்வது காலத்தின் தேவை.
#Covid-19
#Covid-19diary
Subscribe to:
Posts (Atom)
#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க
#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...
-
அது ஒரு அந்தி மாலை. புதிய வளாகத்தை தாண்டி வீட்டின் முற்றத்தில் நின்ற போது, நாய்கள் ஜாக்கிரதை என்ற பதாதை தொங்கியது வாயில் கதவில் அழைப்பு ம...
-
புற்று மண் எடுத்து வரிச்சி வீடு கட்டி பிள்ளை வளர்த்த மண்ணே எங்கள் மண் சோற்று பருக்கை இன்றி ஆற்று நீரை அள்ளி ...
-
கடந்து போன நாட்களில் என் செவி தொட்ட உள்ளம் அசைப்போட்ட ஆயிரம் கதைகளை இதய அறையில் பூட்டி வைத்திருந்தேன் எனக்கு...... பாடங்களும் பாசறைகளும...



