Showing posts with label Activities - Children. Show all posts
Showing posts with label Activities - Children. Show all posts

Sunday, 17 November 2019

#ஆயிஷா ( Aisha)ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரை kg.



என் வழிப்போக்கன் - 14/11/2019

ஆயிஷா
ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரை.

இவள் தான் இன்று என் காலை பயணத்தில் கூட பயணித்தவள்.

 திரு. இரா நடராசன்  ஆயிஷா, ஒரு விஞ்ஞான நூலுக்கான அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை என்னும் குறுநாவலில் 24 பக்கங்களில் ஆயிஷாவை வாழவைத்து மடிந்து போக செய்திருக்கிறார்.

புத்தகத்தை வாசிக்கும்போது இது ஒரு குறுநாவல் என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தவில்லை.

வாசித்து முடிந்தபின்னர் ஆரம்பத்தில் நூலாசிரியர் குறிப்பிடுவது போல ஏனைய 12 நூல்களையும் வாசிக்க வேண்டும் என்று ஆசை வந்தது.

ஆயிஷாவின் ஆசிரியர் எழுதிய 12 நூல்களையும் தேடி பயணித்தேன். அப்போதுதான் இது ஒரு புனைகதை என்று தெரியவந்தது.

திரு இரா நடராசன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும்.  வாசிக்கும்போது முன்னுரை..... இவ்வளவு பெரிதாக இருக்குமா?  என்ற ஐயம் என்னுள் தோன்றினாலும் முடியும்வரை வாசிக்க உங்கள் புத்தகம் என்னை ஆர்வப் படுத்தியது.

யாரையும் குற்றம் சொல்லாது எம் சுற்றம் நடந்து கொள்வதை அப்பட்டமாக ஆயிஷா கதையில் பேசியுள்ளாள். அவள் வாயிலாக எழுந்த எல்லா வினாக்களும் உங்களின் இளமைக் கால வினாக்களாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இன்றைய கல்வி தொடர்பில் முன்வைக்கப்படும் எல்லா விமர்சனங்களையும் அது உள்ளடக்கியுள்ளது.

இப் புத்தகத்திற்கு ஆயிஷா என்ற பெயர் இட காரணம் என்ன?

எது எப்படியோ நான் சார்ந்த சமூகத்திற்கு ஆயிஷா நல்ல ஒரு படத்தை காட்டி இருக்கிறாள்.

கல்விக்கு வயதுக்கும் தொடர்பில்லை. அது அதுக்கு ஒரு வயது வேண்டும் என்பதனையும் அவள் சரியாக எனக்கு சொல்லி இருக்கிறாள். வேறென்ன வேண்டும் இதை விட பெரிய பாடம்.

தூங்கிக் கொண்டிருக்கும் எம் சமூகம் ஆயிஷாகளை உருவாக்க வேண்டிய தார்மீக கடமையில் இருக்கிறது.

இம் முயற்சியில் என்னுடைய பங்கு என்ன என்று நாம் ஒவ்வொருவரும் சுயவிசாரணை செய்து கொள்வோம்.

ஆயிஷாவை என் கையில் சேர்த்த #உரையாடல்_தொடர்கிறது என்ற முகநூல் நட்புக்கு நன்றி.

#Thahir_Noorul_Isra
#NIE_Diary
#Aisha_Ira_Nadarasa

Wednesday, 6 November 2019

சில நிமிடங்கள் பார்வை இழந்த என் விழிகள் (Sighted minutes of my eyes)

சில நிமிடங்கள் பார்வை இழந்த என் விழிகள்.

கற்றல் என்பது மனித கருவில்  இருந்து ஆரம்பிக்கின்றது என விஞ்ஞானம் குறிப்பிடுகின்றது. இதனாலே கற்றல் என்பது வாழ்நாள் முழுதும் இடம்பெறும் ஒரு செயற்பாடு என உளவியல் குறித்துக் காட்டுகிறது. நாம் எவ் விடயங்களை கற்க வேண்டும் என்று பட்டியலிட்டு கற்பதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. மனிதன் இடத்துக்கிடம், சூழலுக்கேற்பவும்  சந்தர்ப்பத்திற்கேற்பவும்  கற்கின்றான்.

சிறுபராயம் முதல் எமக்கு வழிகாட்டிய ஒரு விடயமே பிறருக்கு உதவுதல். இது ஒரு குணப் பண்பாக நாம் எம்மில் வளர்த்து வந்த ஒரு விடயம். ஆனால் பிறருக்கு உதவுவதற்கும் நாங்கள் படிக்க வேண்டுமா என சிந்தித்திருக்கிறோமா? 

‌மிக அண்மையிலேயே நான் பிறருக்கு உதவவும் கற்றல் வேண்டும் எனும் விடயத்தை கற்றுக்கொண்டேன். 

ஒரு நபருக்கு நாங்கள் உதவி செய்ய முற்படுதல்  என்பது மிக அழகான  பண்பாகும். நாங்கள் உதவி செய்யும் பொழுது எங்களுக்கு தேவையான சந்தர்ப்பங்களில் உதவிகள் கிடைக்கின்றன இதனை எம் வாழ்நாளில் நாங்கள் உணர்ந்திருப்போம். எமக்குக் கிடைத்த மகிழ்ச்சியினால் நாம் தொடர்ந்தும் இன்னொருவருக்கு  உதவி செய்ய முன் வருகிறோம். இவ்வாறு உதவி செய்வதற்கு நாம் முறையாக கற்றுள்ளோமா? அல்லது கற்பிக்கப்பட்டுள்ளோமா?  என்ற வினா எழுந்ததுண்டா? இதுவே என்னை ஆச்சரியத்தில் உட்படுத்திய விடயம் ஏனெனில் எதை செய்வதென்றாலும் முறையாக செய்தல் வேண்டும். அதற்கு முறையாக கற்றல் வேண்டும்.

‌ முதல் விடையம்

உதவி செய்பவர் உதவி செய்ய விருப்போடு இருப்பது போல உதவி பெருபவர் அவரின் உதவியை பெற தேவையோடு இருக்கிறாரா? என்பதனை ஏதேனும் ஒரு வகையில் உறுதிப்படுத்தல் வேண்டும்.

பிறருக்கு உதவுதல் என்ற பாடத்தில்  எவ்வாறு பிறருக்கு உதவுதல் வேண்டும் என்பதனை பாடப் புத்தகங்கள் நமக்கு சொல்லித் தருகின்றன. பார்வை குறைபாடுடைய நபர் வெள்ளை பிரம்புடன் பாதையை கடக்க தயாராக இருப்பார் அவரின் கையைப் பிடித்து கொண்டு மறு புறத்தில் அவரை சேர்ப்பது கூட ஒரு உதவி என்பதனை அழகாக  அது எடுத்துக் காட்டியுள்ளது.  நாங்கள் பல சந்தர்ப்பங்களில் பார்வை குறைபாடு உடைய ஒரு நபரை இவ்வாறு பாதையில் ஒரு புறத்திலிருந்து மறுப்பு இடத்திற்கு அழைத்துச் சென்று இருப்போம்.

உங்களுடைய  புறங்கையால் அவருடைய புறங்கையை தட்டுவது ஊடாக நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன். அவ்வாறே அவரின் புறங்கையால் உங்களது கையை தட்டும் போது அவர்  உதவியை ஏற்க தயாராக இருக்கிறார் என்பதனை அறிந்து கொள்கிறோம்.  

யாரும் எப்போதும்  தன்னுடைய தேவையை நிறைவு செய்து கொள்வதற்கு இன்னொருவரின் உதவியைப் பெறவும் தங்கி நிற்கவும் ஒருபோதும் விரும்புவதில்லை.

கடவுள் ஒவ்வொருவருக்கும் விசித்திரமான ஆற்றல்களையும் உள்ளுணர்வையும் கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் இயலாமை உடைய ஒரு நபராக இருந்தாலும்கூட கடவுள் எல்லோருக்கும் வித்தியாசமான திறமைகளையும், ஆளுமைகளையும், பண்புகளையும், குணங்களையும், கொடுத்திருக்கிறார். அடிப்படையில் அவற்றை பிரயோகித்து தனது வாழ்நாளில் இன்னொருவரிடம் தங்கி நிற்காமல் செல்வதற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள். நாம் சுயமாக எனது உதவியை செய்ய முற்படும் செயலானது அவருடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான சந்தர்ப்பங்களை முடக்கும் செயற்பாடாகும்.

ஒருவனுடைய  கால் உரையில் தன்னுடைய காலைவிட்டு பார்க்கும் போது தான் அதனுடைய வேறுபாடுகளையும் அதனுடைய விசித்திரங்களையும் எங்களால் முறையாக உணர்ந்துகொள்ள முடியும்.  ஒரு நாள் பார்வைக் குறைபாடுடைய நபராக நாங்கள் இருந்து பார்த்தால்தான் அவர்களுடைய உணர்வுகளை எங்களால் முற்றாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். ஒரு சில மணித்தியாலங்கள் பார்வை குறைபாடு உடைய நபராக மாரிய அன்று நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம் இது.  இப்பாடம் உங்களுக்கும் உதவியாக அமையும் என்று கருதியதால் இதனை பதிவிடுகிறேன்.
நன்றி.
7/11/2019
#NIE_Diaryll

Saturday, 2 November 2019

விதி (Fate)



விதி


எல்லோரும் எழுதிய பின் - நான்
எழுத என்ன இருக்கிறது - அவன்
எழுதிய பின் அதில் - நான்
எழுத என்ன இருக்கிறது.

வாசித்து ஓய்ந்த பின்னர்
விமர்சிக்க ஏது இருக்கிறது - அவன்
வாசித்து முடித்த பின்னர் - அதில்
 விமர்சிக்க என்ன  இருக்கிறது.

காதுக் குத்தி அதன்
துளை தூர்ந்து  போகும் முன்
கறிவேப்பிலைக் குச்சிப் போடும்
எனது உம்மா.

ஆள்துளையிட்டு
துளை தூர்ந்து போகாமல் - இட
ஒரு கம்புக்  குச்சிகூட
கிடைக்காமல் போனதோ!

பானையில் இருந்தாலே
அகப்பையில் வரும்
தலைக்குல் இருப்பதெல்லாம்
மூலையே இல்லாமல்
மூளையில்லை

பிந்தி வந்த
என் கவிதை
ஏந்தி வந்த செய்தி கேட்டீர்
முந்தி வந்தவனுக்கு
பிந்தி வந்தவன்
சொன்ன செய்தி
குழி வெட்டினால்
வெட்டிய குழியில்
வீழ்ந்தே சாவாய்.

Tuesday, 22 October 2019

நீங்கள் ஒரு பள்ளிச் சமூகப் பணியாளனைக் (School Social Worker) கண்டுள்ளீர்களா?




நீங்கள் ஒரு பள்ளிச் சமூகப் பணியாளனைக் (School Social Worker) கண்டுள்ளீர்களா?
கல்வி என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். கட்டாயக் கல்வி வயதெல்லைக்கு உட்பட்ட எல்லாப் பிள்ளைகளும் பாடசாலையில் தனது நாட்களை நகர்த்தல் வேண்டும் எனபது இலங்கையின் கல்வி முறைமையாகும்;. இலவசக் கல்வியின் விளைவாகவும் இலங்கையின் எழுத்தறிவு வீதம் வளர்ந்தவர்களிடம் 72% மாகவும் இளைஞர்களிடம் 79% மாகவும் காணப்படுகின்றது. எவ்வாறெனினும் 2009 ஆம் ஆண்டு மேற்  கொள்ளப்பட்ட ஆய்வில், இலங்கையில் 45000கும் அதிமான மாணவர்கள் பாடசாலைச் செல்லும் வயதில் பாடசாலையைவிட்டு இடைவிலகியுள்ளனர். அவ்வாறே பரீட்சை ஆணையாளர் (2007) 51% மான பிள்ளைகள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளின் அறிக்கை (2014) குறிப்பிடும் போது 14%மான பிள்ளைகள்  சாதாரண தரத்திற்கு முன்னரே பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர் எனக் குறிப்பிடுகின்றது. இலங்கை பொலீஸ் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் 2018 ஆம் ஆண்டு முடிவில் 8-16 வயதிற்கும் இடையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 96 என சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையிலே பள்ளிச் சமூகப் பணியாளர் என்பவன் யார்? அவரின் தேவை யாது? ஆவரின் பணிகள் எவ்வாறு காணப்படும் என்பதை பற்றி உங்களிடம் குறிப்பிட முற்படுகின்றேன்.

பாடசாலைகளுக்குப் பள்ளிச் சமூகப் பணியாளரின் அவசியம் தொடர்பில் தனது முனைவர் பட்ட ஆய்வினை மேற்க்கொண்ட கல்வியலாளர் ஹெலிக்ஸ் “ஸ்கூல் சோஷியல் வொர்க்கர்க் ஒவ்வொரு பள்ளிக்கும் அவசியம்” என பரிந்துரைத்துள்ளார். அவர் தொடர்ந்தும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

 ‘‘குழந்தைகளுக்கு முழுமையான வளர்ச்சி அளிப்பதேக் கல்வி. இன்றையக் கல்வி முறையில் இதற்கான சாத்தியங்கள் குறைவு. வளரும் சூழலும், குடும்பப் பொருளாதாரமும் குழந்தையின் நடத்தையில் பெரும்பங்கு வகிக்கிறன. இவற்றைப் புரிந்துக் கொண்டு குழந்தையின் மேம்பாட்டுக்காக செயல்படுவதே ஸ்கூல் சோஷியல் வொர்க்கரின் பணி. குழந்தையின் பிளஸ் பாயின்டுகளை கண்டறிந்து தட்டிக் கொடுப்பதும், பிரச்சினைகளைப்  புரிந்துக் கொண்டு அதிலிருந்து விடுபட்டு பட்டாம் பூச்சியாகப் பறக்க உதவுவதும் அவசியம். பள்ளி நிர்வாக நடைமுறை, வகுப்பறைச் செயல்பாடு என பிரச்சினை எதில் இருந்தாலும் தயக்கம் இன்றி சுட்டிக் காட்டுவதும் இதில் அடக்கம். குழந்தையின் முழு வளர்ச்சிக்கு தடையாக நிற்பது எதுவானாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் தீர்வுக்கு வழிகாட்ட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சமூகப் பணியின் தேவையை வலியுறுதினாலும் எமது நாட்டில் இன்னும் இச் சொற்பதம் பரீட்சயம் அற்றதாகவும், பிழையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை கவலையளிக்கின்றது. பொதுச்சேவை, சமூகச் சேவை, சமூகத் தொழிற்பாடு என்று பயன்படுத்தி வந்த மக்கள் தாம் செய்யும் சேவைகளுக்கான சிறந்த சொற்பதம் ‘சமூக பணி’ எனும் இப்பதத்தைப் பிழையாகக்  கையாள்வது வருத்தத்தைத் தருகின்றது. ஆனால் சமூகப் பணி என்பதும் கட்டமைக்கப்பட்ட தொழில் வாண்மையாகும். அது பிரதானமாக 06 அம்சங்களையும் பரந்த சேவைப் பரப்பையும் உள்ளடக்கியுள்ளது.

1.     தனியாள் சமூகப் பணி          (Individual Social Work)
2.     குழுச் சமூகப் பணி             (Group Social Work)
3.     சமூகம் சார் சமூகப் பணி       (Community social Work)
4.     சமூகக் கொள்கைகள்           (Social Policy)
5.     சமூகப் பணி ஆய்வு            (Social Work Research)
6.     சமூகத் தொழிற்பாடுகள்         (Social Action)

மேற்குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அத்துறையில் தேர்ச்சி இறுத்தல் வேண்டும். ஏனெனில் எவ்வாறு ஒரு வைத்தியரின் வேலையை ஆசிரியரால் பார்க்க முடியாதோ அவ்வாறே சமூகப் பணியாளனினால் ஆற்றப்பட வேண்டிய பணியும் ஆகும். இலங்கையில் தேசிய சமூகப் அபிவிருத்தி நிறுவனமே சமூக பணியாளர்களை உருவாக்குகின்றது.

      பாடசாலைச் சமூகப் பணியாளர்கள் விசேடமானவர்கள். அவர்கள் சமூகத்திற்குக் கிடைத்தப் பெரும் சொத்தாவாரகள். மானவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான மத்தியஸ்த்தராக செயற்படுகின்றனர். ஏனெனில் நாம் பொறுப்புத் துறப்புச் சமூகமாக வாழ்வதற்கே பயிற்றப்பட்டுள்ளோம். பிள்ளையின் கற்பித்தலில் அதிகம் பொறுப்புள்ளவர்கள் ஆசிரியர்கள் என்று பெற்றோரும், பெற்றோர்கள் பிள்ளையின் கற்றலில் அக்கறைகாட்டுவதில்லை என ஆசிரியர்களும், ஆசிரியர் கற்பிப்பதில்லை என பிள்ளைகளும் தம் நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொருவர் இடையிலும் காணப்படும் இடைவெளியைக் குறைத்து அனைவரும் தமது கடமைகளை முறையானவும் விருப்படனும் நிறைவேற்றும் பணியையே பள்ளிச் சமூகப் பணியாளர் ஆற்றுகின்றார். துரதிஷ்டவசமாக இலங்கையில் இன்னும் ஸ்கூல் சோஷியல் வொர்க்கரின் தேவை உணரப்பாடாமல் இருப்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.

       பள்ளிச் சமூகப் பணியாளனின் வகிபாகம் யாதாக இருக்கும். பொது இலக்குகளை அடைந்துக்கொள்ள அவர், பலத் தொப்பிகளை தேவைக்கு ஏற்ப அணிந்துக் கொள்கின்றார். அவரது வகிபாங்கு எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை கிறிஸ்டினா டோபன் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “பிள்ளை பாடசாலைக்கு வருவதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைக் குடும்பத்தில் பெற்றுக் கொள்கின்றதா என்பதனை உறுதி செய்து, அவர்கள் எதை செய்ய வேண்டும், அவர்களிடம் காணப்படும் குழப்பங்கள், பாடசாலைக்கு வெளியே அவர்களுக்கு காணப்படும் தேவைகள், என்பவற்றில் கவனம் செலுத்தி அவற்றை அவர்களே நிவர்த்தி செய்வதற்கு உதவியளிக்கின்றார்.

  • பள்ளிச் சமூகப் பணியாளர் ஒருவரின் செயற்பாடுகள் பின்வருமாறு அமைகின்றது.
  • பிள்ளை வினைத்திறனுடனும், செயற் திறனுடனும், கற்பதற்குத் தேவையான அனைத்து விடயங்களையும், குடும்பம், பாடசாலை, சமூகமட்டத்தில் உறுதிப்படுத்தல்.
  • பிரச்சினையுடைய அல்லது உதவி தேவைப்படும் பிள்ளையின் விடயத்தில் தலையிட்டுப் பாடாசாலைக்குத் தொடர்ந்து வருவதற்கும் இயைந்து செயற்படவும் வழிவகுத்தல்.
  • விசேடத் தேவையுடைய மற்றும் கற்றல் இடர்பாடுடைய பிள்ளைகள் தொடர்பான கூட்டங்களில் பங்குபற்றி அவர்களின் கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்தல். அவர்களுக்கான நிகழ்ச்சித் திட்டங்களைப் பாடசாலை மற்றும்  சமுதாய மட்டத்தில் நடத்துதல். பெற்றோரை பங்குப் பெறச்செய்தலுக்கு வழிகாட்டல்;.
  • மாற்றுத் திறனாளிகளின் சமூக மற்றும், விருத்தி வரலாற்றைத் தயாரித்தல்
  • நடத்தைப் பிறழ்வுள்ளப் பிள்ளையின் விடயத்தில் தலையீடு செய்து மகிழ்வான கற்றல் வகுப்பறைக்குப் பழக்கப்படுத்தல்.
  • முரண்பாட்டு மற்றும் கோப முகாமைத்துவத்தை மேற்க்கொள்ளுதல்
  • குடும்ப நெருக்கீட்டில் இருந்து மீள்வதற்கு மாணர்கள், ஆசிரியர்கள்  மற்றும் பெற்றோருடன் இணைந்து உழைத்தல்.
  • உள ஆரோக்கியத்தை மேம்படுத்தப் பிள்ளைகளிடம் கணிப்பீடுகளை மேற்க்; கொள்ளுதல்.
  • சிறுவரத்; துஸ்பிரயோகம், மற்றும் புறக்கணிப்புக்கு உள்ளாகுஞ்; சிறுவர்களை அடையாளம் காணுதலும், அவர்களின் உளவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் தலையிடுதலும்;.
  • நடத்தை ஒழுங்கற்ற மற்றும் உணர்ச்சிப் பிறழ்வுள்ள பிள்ளைகளில் தலையீட்டுச் செயன்முறைகைளை மேற்க்கொள்ளுதல்.
  • வளங்களைப் பகிர்ந்தளித்தல்

   போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றர். எனவே  ஆரோக்கியமானதும், உயர் மட்டத்தில் கல்வி அடைவை எய்துவதற்கும் சமூகப் பணியாளர்களின் தேவை பரவலாக உணரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நீங்களும் ஒரு பள்ளிச் சமூகப் பணியாளராக உருவாவதற்கு வாழ்த்துக்கள்.

தாஹிர் நூருல் இஸ்ரா
உதவி விரிவுரையாளர்,
தேசிய கல்வி நிறுவகம்.
மகரகம
21/10/2019

உசாத்துணை
Perera , M. A. N. R . (2010) School Dropouts in Sri Lanka: A Sociological Analysis. Perera Department of Sociology and Anthropology, University of Sri Jayewardenepura.

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...