விதி
எல்லோரும் எழுதிய பின் - நான்
எழுத என்ன இருக்கிறது - அவன்
எழுதிய பின் அதில் - நான்
எழுத என்ன இருக்கிறது.
வாசித்து ஓய்ந்த பின்னர்
விமர்சிக்க ஏது இருக்கிறது - அவன்
வாசித்து முடித்த பின்னர் - அதில்
விமர்சிக்க என்ன இருக்கிறது.
காதுக் குத்தி அதன்
துளை தூர்ந்து போகும் முன்
கறிவேப்பிலைக் குச்சிப் போடும்
எனது உம்மா.
ஆள்துளையிட்டு
துளை தூர்ந்து போகாமல் - இட
ஒரு கம்புக் குச்சிகூட
கிடைக்காமல் போனதோ!
பானையில் இருந்தாலே
அகப்பையில் வரும்
தலைக்குல் இருப்பதெல்லாம்
மூலையே இல்லாமல்
மூளையில்லை
பிந்தி வந்த
என் கவிதை
ஏந்தி வந்த செய்தி கேட்டீர்
முந்தி வந்தவனுக்கு
பிந்தி வந்தவன்
சொன்ன செய்தி
குழி வெட்டினால்
வெட்டிய குழியில்
வீழ்ந்தே சாவாய்.
No comments:
Post a Comment