#எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க
எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளியிட்டகத்தினறால் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 62 பக்கங்களை உள்ளடக்கிய இந் நூலே என் காலை வழிப்போக்கனாக இணைந்து கொண்டது.
உலகம் முழுவதும் ஏழைகளுக்கு எதிராக உள்ள அமைப்பு குறித்து கோபமான விமர்சனம் இத்தாலி மாணவர்கள் 8 பேர் தங்களை பெயிலாக்கிய பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வருடம் முழுதும் எழுதிய கடிதத்தின் சாராம்சம்
என்று ஆரம்பிக்கிறது புத்தகத்தின் முதல் பக்கம்.
ஒரு மணித்தியாலத்துக்கு உள்ளே புத்தகத்தை வாசித்து முடிப்பதற்கு தூண்டுகின்றது.
1967 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் திறந்த பாடசாலையில் கற்ற மாணவர்களினால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்த இப் புத்தகம் 2017 ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளதுடன் 2019ஆம் ஆண்டு இறுதியிலேயே என் கையை வந்தடைந்துள்ளதனை இட்டு நான் கவலை அடைகிறேன்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையிலான உறவு என்பது மிகவும் புனிதமானது. அவர்களே எம்மை செதுக்குகிறார்கள். பெற்றோருக்கு பின்னர் எமக்கு மிகவும் உயர்ந்த மனிதர்களாக தோன்றுபவர்கள் ஆசிரியர்களே. ஒரு சந்தர்ப்பத்தில் பெற்றோர் சொல்வது பிழை ஆசிரியர் சொல்வது மட்டுமே சரி என்ற மனோபாவத்தைக்கூட நாங்கள் உள்ளாகிறோம்.
இவ்வாறு ஓராசிரியர் எம் மனதில் இடம் பிடித்து விடுகிறார். பிற்காலத்தில் நாம் எமது ஆசிரியர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் கடிதம் எழுதுகிறோம். இப் பண்பு எம்மிடம் வலுவிழந்து போய் காணப்படுகின்றது. என்றாலும் இத்தாலிய மாணவர்களில் 8 பேர் எழுதிய கடிதங்கள் மிகவும் பிரபலம் அடைவதற்கு காரணம் அவர்களின் பாடசாலையும் கல்வி முறைமையும் ஆகும்.
ஒரு மலையில் 20 வீடுகளையே உள்ளடக்கிய ஒரு கிராமத்தில் கிறிஸ்தவ பாதிரியார் மிலானியினால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் மாணவர்களே ஆசிரியர்கள். ஆசிரியர்களே மாணவர்களாகவும் கற்றலும் பகிர்தலும் என்ற கல்வி முறையை பின்பற்றி வருடங்களாக கற்ற இந்த மாணவர்கள், முறைசார் வகுப்பறைகளில் புறக்கணிக்கப்பட்டதனை ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக எழுதி இருக்கின்ற கடிதத்தில் ஒரு முக்கியமான விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தேவையற்ற சொற்களை அகற்றி தேவையான சொற்களை பயன்படுத்தி எளிமையாக ஒரு செய்தியை எத்தி வைப்பது என்பதனை நாங்கள் பார்பியானா பாடசாலைகளில் கற்றுக் கொண்டோம்".
இது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு விடயம் ஏனெனில் இயந்திரத்துக்குள் மூழ்கிப்போன மாணவச் சமூகம் நீண்ட நேர வகுப்பறைகளை விரும்பவில்லை.
அவர்களுக்கு செய்தி மட்டுமே தேவை. ஏனையவற்றை தொலைபேசிகளில் மூழ்கி தேடிக் கொள்வர்.
அவர்கள் ஆசிரியரைப் பார்த்து கேட்கும் வினா என்னை ஊடறுத்துச் சென்றது.
உங்களிடம் கற்ற மாணவன் நான் எங்கிருக்கிறேன் என்று தேடிக்கூட பார்க்காமல் எங்களை நீங்கள் அப்படியே மறந்து விட்டீர்கள், ஆனால் திறந்த பாடசாலைகளில் கற்ற நாங்கள் இன்னும் ஒருவரோடொருவர் தொடர்பில் இருக்கிறோம்.
ஆசிரியர்களை பொறுத்தவரை தமது தொழில் வாழ்க்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களை சந்தித்து இருப்பார்கள். ஆனால் ஒவ்வொரு மாணவனும் வித்தியாசமானதாகவும் வேறுபட்டதாகும் இருப்பதனை உங்களால் மறுக்க முடியாது.
சிலநேரம் என்னுடைய எதிர்பார்ப்பு சாத்தியமற்றதாகவும் இருக்கலாம். ஆனால் ஓர் ஆசிரியனாக, ஒரு தாயாக தான் செதுக்கிய அப் படைப்பை காண்பதில் ஆசை இருக்கும். இது ஒரு கலைஞனாக பார்த்தால் மிகவும் வியப்பானதாகம் இருக்கும்.
இது அவருக்கு மாத்திரமன்றி குறிப்பாக பழைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை எமக்கு தெளிவுப்படுத்துகின்றது.
பார்பேரியன் திறந்த பாடசாலையில் கற்ற மாணவர்கள் இன்னும் ஒருவரோடொருவர் தொடர்பாக இருக்கிறோம். எமது பாடசாலைகளின் பழைய மாணவர்களாகிய நாங்கள் இன்னும் தெளிவு பெற வேண்டிய தேவையை இந்த புத்தகம் எமக்கு இன்னொரு கோணத்தில் சிந்திக்க வைக்கிறது.
உலகத்தைப் பற்றியோ அல்லது நவீன உலகை பற்றி போதிய அறிவின்றி அம்மாணவன் தன் வாழ்நாளை கழித்துவிட்டு செல்கின்றனர். அதனால் ஆசிரியர்களை பார்த்து மாணவர்கள் ஒரு சவால் விடுகிறார்கள். நோயாளிகளை வெளித்தள்ளி 10 ஆரோக்கியமானவர்களை சேர்த்துக் கொள்ளும் ஒரு வினோத மருத்துவமனையாக இன்றைய பாடசாலைகள் இருக்கின்றது" என்றார்.
நீங்கள் அனைவரும் இடைவிலகல் ஆற்ற அல்லது குறைவாக உள்ள இயலுமானவரை இயலாதவர்களையும் ஒரே வகுப்பறையில் சமனாக நடத்துவதற்கான வகுப்பறை முறையை ஆசிரியர்களாகிய நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதே இம் மாணவர்களினதும் அதேவேளையில் கல்வியாளர்களதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
இச் செயன்முறையின் போது ஆசிரியர்கள் விமர்சிக்கப் படுவதையும் இம் மாணவர்கள் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளதனை கண்டுக்கொள்ளாமல் விடமுடியாது.
உங்களின் கட்டாய பள்ளிகள் ஆண்டுதோறும் பல லட்சம் குழந்தைகளை பெயிலாகி வெளியேற்றுகின்றன. அவர்கள் மீண்டும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் பள்ளியை இறக்கவில்லை ஆனால் அவர்கள் எல்லாம் தங்களின் வகுப்பு தோழர்களை இழந்துவிட்டனர்.
பாடசாலையின் மிக முக்கிய வகிபங்கும் நோக்கங்களில் ஒன்றும் சமவயது தோழர்களுடன் பழகுவதற்காண பண்பு ரீதியான விருத்தி ஆகும். அதனையேனும் உறுதி செய்தல் வேண்டும்.
#NIE_Diary
#Thahir_Noorul_Isra
No comments:
Post a Comment