Wednesday, 29 April 2015

தமிழ் மொழி நாவில் தவழும் கடசி தமிழன் இருக்கும் வரை ஆசான் அருணாசலம் ஆயுள் இருக்கும்



அது ஒரு அந்தி மாலை.

புதிய வளாகத்தை தாண்டி

வீட்டின் முற்றத்தில் நின்ற போது,

நாய்கள் ஜாக்கிரதை என்ற பதாதை தொங்கியது வாயில் கதவில்

அழைப்பு மணிக்கு வாய்ப்பில்லை

சேர்……. சேர்……. சேர்…….




என அழைக்க தொடங்கினோம் மாறிமாறி….

குரலின் பலம் குறைய

யாரும் இல்லை போல என கூறியவாறு நகரத் தொடங்கினோம்…

என்ன ஆச்சரியம்




மா மரத்தின் கிளைகளின் இடுக்கில் சூரிய ஒளி தோன்றியது போல

கண்களுக்கு மேலே ஒரு கையும் மறுகையில் ஊன்றுகோலுமாய்,

காட்சியளித்தது அன்றைய விடிவெள்ளி.




“ஓம் நில்லுங்கள், உள்ளே வாருங்கள்”….

என்று அழைத்த அந்த குரல் நாயை அடக்கியது.

வாயில் கதவை தள்ளி,

உள்ளே நுழைந்து அவர் மகளுடன் உரையாட….

ஆரம்பித்த பின்னர் தோன்றியது அந்த உருவம்.




வணக்கம் கூறி நலம் விசாரித்த பின்னர்…..

“நான் உமக்கு கோல்…. எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்”

“நீரே வந்து விட்டிPர்”

“நன்று”.

“உன் நண்பியிடம் தகவல் கூறியிருந்தேன்”

என்று நண்பியை சந்திக்க

அவர்செய்த பிரயத்தனத்தை கண்ட போது

பண்பில் புனிதரை கண்டு வியந்தேன்.




அன்று என் நண்பியின் ஆய்வு கட்டுரைக்கு கையொப்பமிட

முடியாதளவு நடுங்கியது அவர் கை……




எனக்கும் அந்த மாகானுக்கும் இடையில்

எண்ணி கூறினால் பத்து சொற்களே பேசியிருப்போம்.

ஆனால் அவர் குறித்து என் நண்பி கூற நிறைய கேட்டிருக்கிறேன்.

வளாகத்திலே வருகை விரிவுரையாளராக இருந்த போதும்

புதுமுகங்களுக்கும் அறிமுகமானவர்

அறிமுகம் குறைவாயினும் அவரில் ஈடுபாடு அதிகம் எனக்கு.

பேராதனை தந்த பரிசுகளில் ஒரு பொக்கிஷம்.

மரணம் சிலருக்கு முற்றுபுள்ளி

பலருக்கு தொடர்கதையின் திருப்புமுனை.

தமிழ் மொழி நாவில் தவழும் கடசி தமிழன் இருக்கும் வரை

ஆசான் அருணாசலம் ஆயுள் இருக்கும்

உடல் அடங்கி

உயிர் அடங்கி

உன் அஸ்தி சங்கமமானாலும்…..

உன் அறிவு கடளின் அலைகள் ஓய்வதில்லை….

வார்த்தைகள் இல்லை உன் இறப்பை ஏற்க…

பேராதனை வளாகத்தின் மரங்கள் எல்லாம்…..

தம் கிளைகளை அரை கம்பத்தில் பறக்கவிட்டு….

தன் துக்கத்தை வெளிப்படுத்தும் போது

நாணல் நான் எம்மாத்திரம்

நன்றியோடு சமர்பிக்கிறேன்



ஆழ்ந்த இரங்கல்களை…….

No comments:

Post a Comment

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...