Sunday, 5 April 2015

Chittu ninaithathellam




சிட்டு நினைத்ததெல்லாம்…….

உணர்வுகள் மறத்து
உறக்கம் கலைந்து
விழித் தெழுந்து
திரும்பிப் பார்த்து
திகைத்துப் போய்
கண்ட கனவு,
சிறிய சிறுமியின் புகைப்படம் - அது
முகநூலில் இறுதியாய் கண்டது

வற்றிய பாலுக்காய் தாயின்
முற்றிய மார்பகங்களை நக்கி,
பழகிய பிஞ்சு - அப்பனின்
ஒட்டிய முளையில் நாக்கை
தட்டிய வேளையில் அவளுக்கு
பிரித்தறிய தெரியவில்லைபாலையா?
வற்றிய அல்லது ஒட்டிய முளையையா?

குயில் கூவி வசந்தம் வருவதில்லை
அம் மண்ணுக்கு.
குழவி கல்லும், குண்டு துளையும்,
குளைந்த உடலும், கொய்திய தலையும்,
அதன் வழியும் கண்டு வளர்ந்தவள்.

அகரமும் அலிபும் எட்டாகணியாகி
அன்பும் அரவணைப்பும் அகற்றப்பட்ட - அகராதியாகி
இரத்தம் காட்டாராகி
இளவு சத்தமே பரீட்சயமாகி
கண்டு வளர்ந்ததெல்லாம்
நவீனரக ஆயுதங்கள் ஆன போது,
சிட்டு நினைத்ததெல்லாம்,
கலிமா தையிபா தான்.

தூக்கிய கைகள் விழுமுன்,
கழங்கிய கண்கள்,
பம்பிய முகம்,
பதுங்கிய கால்கள்,
செதுக்கிய சிற்பியாய்
செல்லறுத்து போய் நின்றால் -நான்
சொல்லடங்கி போகின்றேன்.
நன்றி வகவம்…..

Poem presented on 03/04/2015  at Vahavam.


No comments:

Post a Comment

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...