Monday, 13 April 2015

வலியில்லா மரணத்தை ஒவ்வொரு இலங்கையரும் உறுதிசெய்வோம்




வலியில்லா மரணத்தை ஒவ்வொரு இலங்கையரும் உறுதிசெய்வோம்


உலகில் நிகழ்கின்ற மொத்த மரணங்களில் 10 சதவீதம் மாத்திரமே திடீர் என ஏற்படுகின்றன. மீதமுள்ள 90 சதவீதமான மரணங்களும் வலி நிவாரணமும் சாந்தப்படுத்தலும்; சிகிச்சைக்கு (Palliative Care) ஏதோ ஒரு வகையில், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தள்ளப்படுகின்றன. ஆனால் எத்தனை பேர் அதனைப் பெற்று அமைதியான மரணத்தை அடைகின்றனர் என்பது கேள்விக்குறியே.

எம்மில் பலர் மரணத்தின் பிடியில் நாட்களை எண்ணிக்கொண்டு வலியையும் பல்வேறு அசௌகரியங்களையும் அனுபவித்து, எப்போது மரணம் தன்னை ஆட்கொள்ளும் என்று அறியாதவர்களாய் தம் விதியை நொந்து கொள்கின்றனர். இவ்வாறு மருத்துவராலும், மருந்துகளாலும்  கைவிடப்பட்ட நோயாளர்களின் மன மற்றும் உடல் சார் வலி மற்றும் அசௌகரியங்களை போக்கி, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சமூகத்துடன் இணைந்து செய்யும் ஒரு விஷேட மருத்துவ சிகிச்சையேபாலியேர்டிவ் கேயர்” (Palliative Care) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும்வலி நிவாரணமும் சாந்தப்படுத்தல் சிகிச்சையும்ஆகும். இதன் நோக்கம் நோயை குணப்படுத்துவது அல்ல. நோயாளர்களுக்கு உதவி செய்தலே ஆகும்.

நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்தல் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும் இயலுமான சந்தர்ப்பங்களில் மருத்துவரை அணுகி மருத்துவ உதவியினை பெற்றுக்கொள்ளும் நாம்,  எப்போது படுத்த படுக்கையாகி எமது அடிப்படை தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியாமல், மற்றவரிடம் தங்கி நிற்கின்றோமோ அன்று முதல் எமது மருத்துவ உரிமையை அனுபவிக்கமுடியாதவர்களாக மாறுகின்றோம்.

வலியுடனும் பல்வேறு அசௌகரியங்களுடனும் தமது இறுதி நாட்களை கழிக்க தொடங்கும் புற்றுநோய் (cancer), பால்வினை நோய் (AIDS), எலும்புருக்கி நோய் போன்றவற்றுக்கு சிகிச்சை பெற்றும், சிகிச்சை பலனின்று வீடுகளுக்கு அனுப்பட்டவர்கள், இறக்கும் வரை படுக்கையில் நாட்களை கழிக்கும் பக்கவாதம் (paralyses), தசை தளர்சி (mussels weakness) போன்ற நோய்களால்  பாதிக்கப்பட்டவர்கள், விபத்துகளுக்கு உட்பட்டு வாழ்நாள் முழுதும் படுக்கையிலோ அல்லது அங்கவீனர்களாவும் முடங்கி வாழ்கின்றார்கள், முதுமையினால் அவதிப்படுகின்றவர்கள் போன்றவர்களுக்கு உதவும் மருத்துவ முறைமையேவலி நிவாரணமும் சாந்தப்படுத்தலும் சிகிச்சைமுறைமையாகும். வயது வரம்பு, பால் வேறுபாடு, கல்வி நிலை என எந்தவித வித்தியாசமும் காட்டாத சிகிச்சையேபாலியேர்டிவ் கேயர்” (Palliative Care).
பயிற்றப்பட வைத்தியர்கள், தாதிகள், சமூக பணியாளர்கள், தன்னார்வ தொண்டரகள் மற்றும் ஏனைய நிபுனர்கள் உள்ளடக்கிய திறமை மிக்க குழுவினால் உள் நோயாளர்கள் அல்லது பராமறிப்பு நிலையங்கள் (Hospice or Palliative care inpatient unit), வெளி நோயாளர் பிரிவு (outpatient unit), வீடுகள் (Home Care) என பல தரத்தில் இச் சிகிச்சை வழங்கப்படுகின்றது. இச்சிகிச்சை முறையில் நோயாளி முழுமையாக கவனத்திற்க் கொள்ளப்படுவார். குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தாதி உடல் ரீதியாக சிகிச்சையளிப்பர். சமூகபணியாளர்கள் நோயாளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்படுத்தி கொடுப்பர். உளவியளார்கள் அல்லது உளவளத்துணையாளர்கள் நோயாளிக்கும் குடும்பத்தினருக்கும் உளநலத்தை பேண உதவிச் செய்வர். தொண்டர்கள் அன்பும் ஆதரவும் கொடுத்து அவர்களுக்கு பக்கபலமாக ஒத்துழைப்பார்கள். இவ்வாறாக நோயாளி மாத்திரம் அன்றி அக் குடும்பமே பிரயோசனப்படுவதுடன், அவர்களின் பழு பகிரப்படுவதனால் நோயாளி மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் நாட்களை கழிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைப்பதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் அதிகரிக்கின்றது.
இறுதியாக குறிப்பிடப்பட்ட முறைமையானது ஜனநாயக தன்மை வாய்ந்ததாகவும் எளிமையானதாகவும் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது. ஒரு குறித்த சமூகத்தில் உள்ள மக்களே அவர்களிடையே அவதிப்படும் நோயளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஓர் சமூகம் சார் முறையாகவும் காணப்படுகின்றது.
இந்நிலையிலேயே வலி நிவாரணமும் சாந்தப்படுத்தல் சிகிச்சையும் (Palliative Care) இலங்கையில் ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக (20/4/2015) “இலங்கை பாலியேரடிவ் கேயர் அசோசியேசன்”(Srilanka Palliative Care Association) ஆரம்பிக்கபடவுள்ளது. வலியில்லா மரணத்தை ஒவ்வொரு இலங்கையரிடமும் கொண்டு செல்வதற்கான தருனம் உதயமாகி விட்டது. அதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டிய காலம் இதுவே. எறுப்புகளாய் அணிதிறள்வோம்.

ஆக்கம்:
தாஹிர் நூருல் இஸ்ரா
சமூகபணியாளர்
மின்னஞ்சல்: israanas@gmail.com

2 comments:

  1. உங்கள் இப்புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...