Pesum Ullangal is a talking channel with mind. We wish to share our feelings and learning with you.
Showing posts with label Research. Show all posts
Showing posts with label Research. Show all posts
Monday, 13 April 2015
வலியில்லா மரணத்தை ஒவ்வொரு இலங்கையரும் உறுதிசெய்வோம்
வலியில்லா மரணத்தை
ஒவ்வொரு இலங்கையரும் உறுதிசெய்வோம்
உலகில் நிகழ்கின்ற மொத்த
மரணங்களில் 10 சதவீதம் மாத்திரமே திடீர்
என ஏற்படுகின்றன. மீதமுள்ள 90 சதவீதமான மரணங்களும் வலி நிவாரணமும் சாந்தப்படுத்தலும்;
சிகிச்சைக்கு (Palliative Care) ஏதோ ஒரு வகையில்,
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தள்ளப்படுகின்றன.
ஆனால் எத்தனை பேர் அதனைப்
பெற்று அமைதியான மரணத்தை அடைகின்றனர் என்பது
கேள்விக்குறியே.
எம்மில் பலர் மரணத்தின்
பிடியில் நாட்களை எண்ணிக்கொண்டு வலியையும்
பல்வேறு அசௌகரியங்களையும் அனுபவித்து, எப்போது மரணம் தன்னை
ஆட்கொள்ளும் என்று அறியாதவர்களாய் தம்
விதியை நொந்து கொள்கின்றனர். இவ்வாறு
மருத்துவராலும், மருந்துகளாலும் கைவிடப்பட்ட
நோயாளர்களின் மன மற்றும் உடல்
சார் வலி மற்றும் அசௌகரியங்களை
போக்கி, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சமூகத்துடன்
இணைந்து செய்யும் ஒரு விஷேட மருத்துவ
சிகிச்சையே “பாலியேர்டிவ் கேயர்” (Palliative Care)
என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் “வலி நிவாரணமும் சாந்தப்படுத்தல்
சிகிச்சையும்”ஆகும். இதன் நோக்கம்
நோயை குணப்படுத்துவது அல்ல. நோயாளர்களுக்கு உதவி
செய்தலே ஆகும்.
நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்தல் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும் இயலுமான சந்தர்ப்பங்களில் மருத்துவரை
அணுகி மருத்துவ உதவியினை பெற்றுக்கொள்ளும் நாம், எப்போது
படுத்த படுக்கையாகி எமது அடிப்படை தேவைகளை
நிறைவு செய்துகொள்ள முடியாமல், மற்றவரிடம் தங்கி நிற்கின்றோமோ அன்று
முதல் எமது மருத்துவ உரிமையை
அனுபவிக்கமுடியாதவர்களாக மாறுகின்றோம்.
வலியுடனும் பல்வேறு அசௌகரியங்களுடனும் தமது
இறுதி நாட்களை கழிக்க தொடங்கும்
புற்றுநோய் (cancer), பால்வினை நோய் (AIDS), எலும்புருக்கி
நோய் போன்றவற்றுக்கு சிகிச்சை பெற்றும், சிகிச்சை பலனின்று வீடுகளுக்கு அனுப்பட்டவர்கள், இறக்கும் வரை படுக்கையில் நாட்களை
கழிக்கும் பக்கவாதம் (paralyses), தசை தளர்சி (mussels weakness) போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்துகளுக்கு உட்பட்டு வாழ்நாள் முழுதும் படுக்கையிலோ அல்லது அங்கவீனர்களாவும் முடங்கி
வாழ்கின்றார்கள், முதுமையினால் அவதிப்படுகின்றவர்கள் போன்றவர்களுக்கு உதவும் மருத்துவ முறைமையே
“வலி நிவாரணமும் சாந்தப்படுத்தலும் சிகிச்சை” முறைமையாகும். வயது வரம்பு, பால்
வேறுபாடு, கல்வி நிலை என
எந்தவித வித்தியாசமும் காட்டாத சிகிச்சையே “பாலியேர்டிவ்
கேயர்” (Palliative
Care).
பயிற்றப்பட வைத்தியர்கள், தாதிகள், சமூக பணியாளர்கள், தன்னார்வ
தொண்டரகள் மற்றும் ஏனைய நிபுனர்கள்
உள்ளடக்கிய திறமை மிக்க குழுவினால்
உள் நோயாளர்கள் அல்லது பராமறிப்பு நிலையங்கள்
(Hospice
or Palliative care inpatient unit),
வெளி நோயாளர் பிரிவு (outpatient unit), வீடுகள் (Home
Care) என பல தரத்தில் இச்
சிகிச்சை வழங்கப்படுகின்றது. இச்சிகிச்சை முறையில் நோயாளி முழுமையாக கவனத்திற்க்
கொள்ளப்படுவார். குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தாதி
உடல் ரீதியாக சிகிச்சையளிப்பர். சமூகபணியாளர்கள்
நோயாளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும்
ஏற்படுத்தி கொடுப்பர். உளவியளார்கள் அல்லது உளவளத்துணையாளர்கள் நோயாளிக்கும்
குடும்பத்தினருக்கும் உளநலத்தை பேண உதவிச் செய்வர்.
தொண்டர்கள் அன்பும் ஆதரவும் கொடுத்து
அவர்களுக்கு பக்கபலமாக ஒத்துழைப்பார்கள். இவ்வாறாக நோயாளி மாத்திரம் அன்றி
அக் குடும்பமே பிரயோசனப்படுவதுடன், அவர்களின் பழு பகிரப்படுவதனால் நோயாளி
மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் நாட்களை கழிப்பதற்கு சந்தர்ப்பம்
கிடைப்பதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் அதிகரிக்கின்றது.
இறுதியாக குறிப்பிடப்பட்ட முறைமையானது ஜனநாயக தன்மை வாய்ந்ததாகவும்
எளிமையானதாகவும் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவும்
உள்ளது. ஒரு குறித்த சமூகத்தில்
உள்ள மக்களே அவர்களிடையே அவதிப்படும்
நோயளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஓர் சமூகம் சார்
முறையாகவும் காணப்படுகின்றது.
இந்நிலையிலேயே வலி நிவாரணமும் சாந்தப்படுத்தல்
சிகிச்சையும் (Palliative
Care) இலங்கையில் ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக
(20/4/2015) “இலங்கை பாலியேரடிவ் கேயர்
அசோசியேசன்”(Srilanka
Palliative Care Association) ஆரம்பிக்கபடவுள்ளது.
வலியில்லா மரணத்தை ஒவ்வொரு இலங்கையரிடமும்
கொண்டு செல்வதற்கான தருனம் உதயமாகி விட்டது.
அதற்காக நாம் அனைவரும் ஒன்று
சேர்ந்து செயற்பட வேண்டிய காலம்
இதுவே. எறுப்புகளாய் அணிதிறள்வோம்.
ஆக்கம்:
தாஹிர்
நூருல் இஸ்ரா
சமூகபணியாளர்
மின்னஞ்சல்:
israanas@gmail.com
Sunday, 5 April 2015
Chittu ninaithathellam
சிட்டு நினைத்ததெல்லாம்…….
உணர்வுகள்
மறத்து
உறக்கம்
கலைந்து
விழித்
தெழுந்து
திரும்பிப்
பார்த்து
திகைத்துப்
போய்
கண்ட கனவு,
சிறிய சிறுமியின் புகைப்படம் - அது
முகநூலில்
இறுதியாய் கண்டது
வற்றிய
பாலுக்காய் தாயின்
முற்றிய
மார்பகங்களை நக்கி,
பழகிய பிஞ்சு - அப்பனின்
ஒட்டிய
முளையில் நாக்கை
தட்டிய
வேளையில் அவளுக்கு
பிரித்தறிய
தெரியவில்லை –பாலையா?
வற்றிய
அல்லது ஒட்டிய முளையையா?
குயில்
கூவி வசந்தம் வருவதில்லை
அம் மண்ணுக்கு.
குழவி கல்லும், குண்டு துளையும்,
குளைந்த
உடலும், கொய்திய தலையும்,
அதன் வழியும் கண்டு வளர்ந்தவள்.
அகரமும்
அலிபும் எட்டாகணியாகி
அன்பும்
அரவணைப்பும் அகற்றப்பட்ட - அகராதியாகி
இரத்தம்
காட்டாராகி
இளவு சத்தமே பரீட்சயமாகி
கண்டு வளர்ந்ததெல்லாம்
நவீனரக
ஆயுதங்கள் ஆன போது,
சிட்டு
நினைத்ததெல்லாம்,
கலிமா தையிபா தான்.
தூக்கிய
கைகள் விழுமுன்,
கழங்கிய
கண்கள்,
பம்பிய
முகம்,
பதுங்கிய
கால்கள்,
செதுக்கிய
சிற்பியாய்
செல்லறுத்து
போய் நின்றால் -நான்
சொல்லடங்கி
போகின்றேன்.
நன்றி வகவம்…..
Poem presented on 03/04/2015 at Vahavam.
Tuesday, 10 February 2015
Subscribe to:
Posts (Atom)
#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க
#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...
-
அது ஒரு அந்தி மாலை. புதிய வளாகத்தை தாண்டி வீட்டின் முற்றத்தில் நின்ற போது, நாய்கள் ஜாக்கிரதை என்ற பதாதை தொங்கியது வாயில் கதவில் அழைப்பு ம...
-
புற்று மண் எடுத்து வரிச்சி வீடு கட்டி பிள்ளை வளர்த்த மண்ணே எங்கள் மண் சோற்று பருக்கை இன்றி ஆற்று நீரை அள்ளி ...
-
கடந்து போன நாட்களில் என் செவி தொட்ட உள்ளம் அசைப்போட்ட ஆயிரம் கதைகளை இதய அறையில் பூட்டி வைத்திருந்தேன் எனக்கு...... பாடங்களும் பாசறைகளும...


