Friday, 10 April 2020

I am Corona நான் கொரோனா




நான் கொரோனா

அன்பிற்குரியசி சிறுவர்களே  ஒரு மாத காலம் வித்தியாசமான ஒரு சூழலை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
வீடுகளில் உங்கள் பெற்றோருடன் இருப்பதற்கும். பாடசாலைகள் மூடப்பட்டு இருப்பதற்கும் காரணம் நான். 

என்னுடைய பெயரை உங்கள் வாழ்நாளில் இனி மறக்கவே மாட்டீர்கள். அது நான் தான் கொரோனா. என்னை கோவிட் 19 என்றும் அழைப்பார்கள்.

என் மீது உங்களுக்கு அதிகம் கோபம் இருக்கும். நான் உங்களை தொற்றி விடுவேனோ என்ற பயம் உங்களுக்கு இருக்கும். 

WHO எனும் உலக சுகாதார ஸ்தாபனம் சொல்லும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் உங்களை நான் தொற்ற மாட்டேன்.

1 தும்மும் போது உங்கள் கைகளால் உங்கள் மூக்கை மறைத்துக் கொள்ளுங்கள்.

2. நண்பர்களுடன் விளையாடும் பொழுது ஓரளவு தள்ளி இருந்து ஆள் தொடர்பை குறைத்துக் கொள்ளுங்கள்.

3. முடியுமான வரை வெளியில் செல்வதை தவிர்த்து விடுங்கள்.

4 காய்ச்சல் அல்லது இருமல் சளி போன்ற ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உங்கள் பெற்றோருடன் கலந்துரையாடி மருத்துவ ஆலோசனைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ளுங்கள்.

நான் அவ்வளவு மோசமானவன் அல்ல. என்னைக் கண்டு நீங்கள்  பயப்படத் தேவையில்லை. 

சுகாதார வழிமுறைகளை
பின்பற்றும் போது நான் ஒருபோதும் உங்களை தொற்றவே மாட்டேன். உங்கள் பெற்றோருக்கும் இதனை கற்றுக் கொடுங்கள்.

தொடர்ந்தும் நீங்கள் என்னை பற்றிய தகவல்களை சம்பவங்களை பலரிடமிருந்தும், பலவழிகளிலும் கேட்டும் வருகிறீர்கள். 

சில வேளை தொலைபேசிகள் ஊடாக சமூக வலைத்தளங்களில் பார்த்தும் வருகிறீர்கள்.  அவற்றில் அதிகமானவை திரிபுபடுத்தப்பட்ட செய்திகளாகும். 

அதனை வாசித்து நீங்கள் பயப்படவோ, கவலையடையவோ, வீண் பீதியடையவோ தேவையில்லை.

உங்களை அறியாமலே நீங்கள் பின்வருமாறு நடந்து கொள்ள முடியும். 

தூங்குவதற்கு பிரச்சினையாக உள்ளதா?

தூங்கும்போது பயங்கரமான கனவுகள் வருகிறதா?

தனிமையில் இருப்பதற்கு பயமாக இருக்கிறதா?

உங்கல் விளையாட்டு பொருட்களை திரும்ப திரும்ப சுத்தப்படுத்துகிறீர்களா?
வழமையை விட உங்களுக்கு கோபமும் ஆத்திரமும் ஏற்படுகிறதா?

உங்களுக்கு யாருடனும் கதைப்பதற்கு சேர்வதற்கு விருப்பம் இல்லாமல் போகிறதா?

காலை கடமைகளை நிறைவேற்றுவதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?

உணவு உண்பதற்கு விருப்பமற்று காணப்படுகிறதா?

பெற்றோர்களே பாதுகாவலர்களே மேற்குறிப்பிட்ட விடயங்களை சிறுவர்களிடம் நீங்கள் அவதானிக்கலாம். 

இது அவர்களின் சாதாரண நடத்தையும் மன வளர்ச்சியையும் பாதிக்கும் 

சிறுவர்களில்  பெரும்பாலும் அவர்களுடைய பயம் மற்றும் நெருக்கீட்டை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் இருக்கும். 

எனவே கவலையாக வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் பின்வருமாறு உதவ முடியும்

1. நாளாந்த பழக்கங்கள் சிறுவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். இப்போது அதில் கணிசமான மாற்றம் ஏற்பட்டிருக்கும். உரிய நேரத்தில் காலையில் எழுந்திருக்க மாட்டார்கள். பகல் உணவு சாப்பிடுவதற்கு அண்மித்தே  காலை உணவை சாப்பிடுவார்கள். எனவே மீளவும் பழக்கங்களை உருவாக்குங்கள். வழமையாக தூங்கும் நேரம் மற்றும் சாப்பாட்டு நேரத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒன்றாக கதைகளைக் கூறி மகிழ்ந்திருங்கள். பாடல்களைப் பாடி கழித்து இருங்கள். இதைத்தான் சிறுவர்கள் விரும்புகிறார்கள்.

2. பெற்றோர்களே பாதுகாவலர்களே நீங்கள் உடலால் மட்டுமே சிறுவர்களோடு இருக்கிறீர்கள். (Physically present mentally out) நீங்கள் என்னைப் பற்றி தேடிப் பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தைவிட  உங்கள் பிள்ளையைப் பற்றி தேடிப்பாருங்கள். அவர்கள் இந் நேரத்தில் உங்களுடன் இருக்கவே விரும்புகின்றனர். அதனை அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். இதன் போது தயவு செய்து உங்கள் தொலைபேசிகளையும், நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சி பெட்டிகளையும், நீங்கள் வாசிக்கும் பத்திரிகைகள்  அல்லது உங்கள் பொழுது போக்கு சாதனங்களை ஒரு பக்கமாக வைத்து விட்டு பிள்ளைகளோடு உங்கள் பொழுதை கழிக்க முயற்சி செய்யுங்கள்.

3. வீடுகளை சுற்றி இருக்கின்ற ஏனைய சிறுவர்களுடன் விளையாடுவதற்கு நீங்கள் அனுமதிக்காதது ஏன்? என்பதனை தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். சமவயது பாடசாலை நண்பர்களோடு தொலைபேசியுடன் உரையாட வாய்ப்பளியுங்கள்.

4.  உங்களுடைய ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். சிறுவர்கள் பெரியவர்களிடமும் பெற்றோர்களிடமும் அவதானித்தே  தம்மிடையே மனவடுவினை வெளிப்படுத்த கற்றுக் கொள்கிறார்கள். உங்கள் நடத்தையினையே அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதில் கவனமாக இருங்கள்.

5. பாடப்புத்தகங்களுடன் உங்கள் பிள்ளைகளை கட்டிப்போட்டு விடாதீர்கள். அவர்களின் சிறு பராயத்தை உங்களால் திருப்பிக் கொடுக்க முடியாது. இவ்வாறான சந்தர்ப்பங்கள் பாடப் புத்தகத்திற்கு அப்பால் பல வாழ்க்கைப் பாடங்களை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கிறது. 

இது வாழ்வில் இன்னொரு தடவை எப்படி முகம் கொடுக்க வேண்டும் என்பதனை கற்றுக் கொடுக்கிறது.

என்னைப்பற்றி நானே சொல்ல வேண்டும். 

என் அறிவுரைகளை தயவு செய்து பின்பற்றுங்கள். 

நாளைய இவ்வுலகம் சிறுவர்களின் கையிலே இருக்கிறது

இடர்காலத்துக்கு முகம்கொடுக்கும் திறனுள்ள சிறுவர்களாக இவர்கள் வளரட்டும். 

அதில் நான் எதிர்மறையாக பங்களிப்பு செய்திருக்கிறேன். 

எதிலும் ஒரு பாடம் இருக்கிறது. 

இதிலும் ஒரு பாடம் இருக்கிறது.
நன்றி

நான் கொவிட்-19





No comments:

Post a Comment

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...