கடையில் பூத்த கவிதைகள்
கடையில் பூத்த கவிதைகள்
கையில் கிடைத்து மூன்று மாதம்
பையில் என் தோழனாய்
கிடைத்த இடமெல்லாம் கூடவந்தது.
நீண்டு செல்லும் அறிமுக உரைகள்,
ஈண்டு தேடி கவிதை கண்டேன்.
நான் பிறக்க முன்பே,
நீர் கவிதை அமுது குடித்தவர்.
ஒரு பக்க கவிதையாய்
சுருக்க மடலாய்,
அஞ்சலி செய்தியாய்,
அறிமுக விழிப்பாய்,
அமைந்த உம் கவிதைகள்,
கிழக்கின் கவிஞர்களிள் உம்
காத்திரமான பங்களிப்பு கண்டேன்.
அறிமுக உரைகள்,
அச்சத்தை தோற்றியது.
அடுத்த கவிதைத் தொகுப்புக்கு
எழுத யார் உள்ளார் என்று,
பக்கங்களின் என்னிக்கை
பஞ்சம் இல்லா
கவிதை கடையில்
கொட்டி கிடக்கும்
கடுகு போல
கடையில் பூத்த கவிதைகள்
கொட்டி கிடக்கிறது
உம் ஆரம்பகால கவிதைகளுக்கும்
பின் எழுதிய கவிதைகளுக்கும்
தொய்வையும் கருத்து செறிவும்
தேடுதலையும் தீவிர வாசிப்பையும்
தேர்ந்த சொற்பிரயோகமும்
சோம்பல் இன்றி
நேர சேமிப்பையும்,
கோழையின்றி எதிர்பை
கூர்முனை சொல்லடுக்கி,
வீரனாய் உன்
கவி நெஞ்சு வெடிப்பதையும்
கண்டு வியந்தேன்.
அறிமுகம் இல்லாமல்
அப்துல் அஸீஸை
வகத்தில் அழைக்க
வருந்தி நின்றேன்.
இன்று அவரின் கவிதைகள்
எனக்கு அறிமுகம் தந்துள்ளது.
அழைபேசியில் அழைப்பெடுத்து,
மறவாமல் வாழ்த்து சொன்ன
மகத்தான உதாரணக் கவி நீங்கள்.
என் தலைமையில் கவிபாடியமைக்கு
நன்றி
அன்புடன்
கவிதாயினி –தெல்தோட்டை இஸ்ரா
17/05/2017
No comments:
Post a Comment