Saturday, 2 November 2019

விதி (Fate)



விதி


எல்லோரும் எழுதிய பின் - நான்
எழுத என்ன இருக்கிறது - அவன்
எழுதிய பின் அதில் - நான்
எழுத என்ன இருக்கிறது.

வாசித்து ஓய்ந்த பின்னர்
விமர்சிக்க ஏது இருக்கிறது - அவன்
வாசித்து முடித்த பின்னர் - அதில்
 விமர்சிக்க என்ன  இருக்கிறது.

காதுக் குத்தி அதன்
துளை தூர்ந்து  போகும் முன்
கறிவேப்பிலைக் குச்சிப் போடும்
எனது உம்மா.

ஆள்துளையிட்டு
துளை தூர்ந்து போகாமல் - இட
ஒரு கம்புக்  குச்சிகூட
கிடைக்காமல் போனதோ!

பானையில் இருந்தாலே
அகப்பையில் வரும்
தலைக்குல் இருப்பதெல்லாம்
மூலையே இல்லாமல்
மூளையில்லை

பிந்தி வந்த
என் கவிதை
ஏந்தி வந்த செய்தி கேட்டீர்
முந்தி வந்தவனுக்கு
பிந்தி வந்தவன்
சொன்ன செய்தி
குழி வெட்டினால்
வெட்டிய குழியில்
வீழ்ந்தே சாவாய்.

Tuesday, 22 October 2019

நீங்கள் ஒரு பள்ளிச் சமூகப் பணியாளனைக் (School Social Worker) கண்டுள்ளீர்களா?




நீங்கள் ஒரு பள்ளிச் சமூகப் பணியாளனைக் (School Social Worker) கண்டுள்ளீர்களா?
கல்வி என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். கட்டாயக் கல்வி வயதெல்லைக்கு உட்பட்ட எல்லாப் பிள்ளைகளும் பாடசாலையில் தனது நாட்களை நகர்த்தல் வேண்டும் எனபது இலங்கையின் கல்வி முறைமையாகும்;. இலவசக் கல்வியின் விளைவாகவும் இலங்கையின் எழுத்தறிவு வீதம் வளர்ந்தவர்களிடம் 72% மாகவும் இளைஞர்களிடம் 79% மாகவும் காணப்படுகின்றது. எவ்வாறெனினும் 2009 ஆம் ஆண்டு மேற்  கொள்ளப்பட்ட ஆய்வில், இலங்கையில் 45000கும் அதிமான மாணவர்கள் பாடசாலைச் செல்லும் வயதில் பாடசாலையைவிட்டு இடைவிலகியுள்ளனர். அவ்வாறே பரீட்சை ஆணையாளர் (2007) 51% மான பிள்ளைகள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளின் அறிக்கை (2014) குறிப்பிடும் போது 14%மான பிள்ளைகள்  சாதாரண தரத்திற்கு முன்னரே பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர் எனக் குறிப்பிடுகின்றது. இலங்கை பொலீஸ் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் 2018 ஆம் ஆண்டு முடிவில் 8-16 வயதிற்கும் இடையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 96 என சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையிலே பள்ளிச் சமூகப் பணியாளர் என்பவன் யார்? அவரின் தேவை யாது? ஆவரின் பணிகள் எவ்வாறு காணப்படும் என்பதை பற்றி உங்களிடம் குறிப்பிட முற்படுகின்றேன்.

பாடசாலைகளுக்குப் பள்ளிச் சமூகப் பணியாளரின் அவசியம் தொடர்பில் தனது முனைவர் பட்ட ஆய்வினை மேற்க்கொண்ட கல்வியலாளர் ஹெலிக்ஸ் ஸ்கூல் சோஷியல் வொர்க்கர்க் ஒவ்வொரு பள்ளிக்கும் அவசியம்என பரிந்துரைத்துள்ளார். அவர் தொடர்ந்தும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

 ‘‘குழந்தைகளுக்கு முழுமையான வளர்ச்சி அளிப்பதேக் கல்வி. இன்றையக் கல்வி முறையில் இதற்கான சாத்தியங்கள் குறைவு. வளரும் சூழலும், குடும்பப் பொருளாதாரமும் குழந்தையின் நடத்தையில் பெரும்பங்கு வகிக்கிறன. இவற்றைப் புரிந்துக் கொண்டு குழந்தையின் மேம்பாட்டுக்காக செயல்படுவதே ஸ்கூல் சோஷியல் வொர்க்கரின் பணி. குழந்தையின் பிளஸ் பாயின்டுகளை கண்டறிந்து தட்டிக் கொடுப்பதும், பிரச்சினைகளைப்  புரிந்துக் கொண்டு அதிலிருந்து விடுபட்டு பட்டாம் பூச்சியாகப் பறக்க உதவுவதும் அவசியம். பள்ளி நிர்வாக நடைமுறை, வகுப்பறைச் செயல்பாடு என பிரச்சினை எதில் இருந்தாலும் தயக்கம் இன்றி சுட்டிக் காட்டுவதும் இதில் அடக்கம். குழந்தையின் முழு வளர்ச்சிக்கு தடையாக நிற்பது எதுவானாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் தீர்வுக்கு வழிகாட்ட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சமூகப் பணியின் தேவையை வலியுறுதினாலும் எமது நாட்டில் இன்னும் இச் சொற்பதம் பரீட்சயம் அற்றதாகவும், பிழையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை கவலையளிக்கின்றது. பொதுச்சேவை, சமூகச் சேவை, சமூகத் தொழிற்பாடு என்று பயன்படுத்தி வந்த மக்கள் தாம் செய்யும் சேவைகளுக்கான சிறந்த சொற்பதம் சமூக பணிஎனும் இப்பதத்தைப் பிழையாகக்  கையாள்வது வருத்தத்தைத் தருகின்றது. ஆனால் சமூகப் பணி என்பதும் கட்டமைக்கப்பட்ட தொழில் வாண்மையாகும். அது பிரதானமாக 06 அம்சங்களையும் பரந்த சேவைப் பரப்பையும் உள்ளடக்கியுள்ளது.

1.     தனியாள் சமூகப் பணி          (Individual Social Work)
2.     குழுச் சமூகப் பணி             (Group Social Work)
3.     சமூகம் சார் சமூகப் பணி       (Community social Work)
4.     சமூகக் கொள்கைகள்           (Social Policy)
5.     சமூகப் பணி ஆய்வு            (Social Work Research)
6.     சமூகத் தொழிற்பாடுகள்         (Social Action)

மேற்குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அத்துறையில் தேர்ச்சி இறுத்தல் வேண்டும். ஏனெனில் எவ்வாறு ஒரு வைத்தியரின் வேலையை ஆசிரியரால் பார்க்க முடியாதோ அவ்வாறே சமூகப் பணியாளனினால் ஆற்றப்பட வேண்டிய பணியும் ஆகும். இலங்கையில் தேசிய சமூகப் அபிவிருத்தி நிறுவனமே சமூக பணியாளர்களை உருவாக்குகின்றது.

      பாடசாலைச் சமூகப் பணியாளர்கள் விசேடமானவர்கள். அவர்கள் சமூகத்திற்குக் கிடைத்தப் பெரும் சொத்தாவாரகள். மானவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான மத்தியஸ்த்தராக செயற்படுகின்றனர். ஏனெனில் நாம் பொறுப்புத் துறப்புச் சமூகமாக வாழ்வதற்கே பயிற்றப்பட்டுள்ளோம். பிள்ளையின் கற்பித்தலில் அதிகம் பொறுப்புள்ளவர்கள் ஆசிரியர்கள் என்று பெற்றோரும், பெற்றோர்கள் பிள்ளையின் கற்றலில் அக்கறைகாட்டுவதில்லை என ஆசிரியர்களும், ஆசிரியர் கற்பிப்பதில்லை என பிள்ளைகளும் தம் நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொருவர் இடையிலும் காணப்படும் இடைவெளியைக் குறைத்து அனைவரும் தமது கடமைகளை முறையானவும் விருப்படனும் நிறைவேற்றும் பணியையே பள்ளிச் சமூகப் பணியாளர் ஆற்றுகின்றார். துரதிஷ்டவசமாக இலங்கையில் இன்னும் ஸ்கூல் சோஷியல் வொர்க்கரின் தேவை உணரப்பாடாமல் இருப்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.

       பள்ளிச் சமூகப் பணியாளனின் வகிபாகம் யாதாக இருக்கும். பொது இலக்குகளை அடைந்துக்கொள்ள அவர், பலத் தொப்பிகளை தேவைக்கு ஏற்ப அணிந்துக் கொள்கின்றார். அவரது வகிபாங்கு எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை கிறிஸ்டினா டோபன் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். பிள்ளை பாடசாலைக்கு வருவதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைக் குடும்பத்தில் பெற்றுக் கொள்கின்றதா என்பதனை உறுதி செய்து, அவர்கள் எதை செய்ய வேண்டும், அவர்களிடம் காணப்படும் குழப்பங்கள், பாடசாலைக்கு வெளியே அவர்களுக்கு காணப்படும் தேவைகள், என்பவற்றில் கவனம் செலுத்தி அவற்றை அவர்களே நிவர்த்தி செய்வதற்கு உதவியளிக்கின்றார்.

  • பள்ளிச் சமூகப் பணியாளர் ஒருவரின் செயற்பாடுகள் பின்வருமாறு அமைகின்றது.
  • பிள்ளை வினைத்திறனுடனும், செயற் திறனுடனும், கற்பதற்குத் தேவையான அனைத்து விடயங்களையும், குடும்பம், பாடசாலை, சமூகமட்டத்தில் உறுதிப்படுத்தல்.
  • பிரச்சினையுடைய அல்லது உதவி தேவைப்படும் பிள்ளையின் விடயத்தில் தலையிட்டுப் பாடாசாலைக்குத் தொடர்ந்து வருவதற்கும் இயைந்து செயற்படவும் வழிவகுத்தல்.
  • விசேடத் தேவையுடைய மற்றும் கற்றல் இடர்பாடுடைய பிள்ளைகள் தொடர்பான கூட்டங்களில் பங்குபற்றி அவர்களின் கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்தல். அவர்களுக்கான நிகழ்ச்சித் திட்டங்களைப் பாடசாலை மற்றும்  சமுதாய மட்டத்தில் நடத்துதல். பெற்றோரை பங்குப் பெறச்செய்தலுக்கு வழிகாட்டல்;.
  • மாற்றுத் திறனாளிகளின் சமூக மற்றும், விருத்தி வரலாற்றைத் தயாரித்தல்
  • நடத்தைப் பிறழ்வுள்ளப் பிள்ளையின் விடயத்தில் தலையீடு செய்து மகிழ்வான கற்றல் வகுப்பறைக்குப் பழக்கப்படுத்தல்.
  • முரண்பாட்டு மற்றும் கோப முகாமைத்துவத்தை மேற்க்கொள்ளுதல்
  • குடும்ப நெருக்கீட்டில் இருந்து மீள்வதற்கு மாணர்கள், ஆசிரியர்கள்  மற்றும் பெற்றோருடன் இணைந்து உழைத்தல்.
  • உள ஆரோக்கியத்தை மேம்படுத்தப் பிள்ளைகளிடம் கணிப்பீடுகளை மேற்க்; கொள்ளுதல்.
  • சிறுவரத்; துஸ்பிரயோகம், மற்றும் புறக்கணிப்புக்கு உள்ளாகுஞ்; சிறுவர்களை அடையாளம் காணுதலும், அவர்களின் உளவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் தலையிடுதலும்;.
  • நடத்தை ஒழுங்கற்ற மற்றும் உணர்ச்சிப் பிறழ்வுள்ள பிள்ளைகளில் தலையீட்டுச் செயன்முறைகைளை மேற்க்கொள்ளுதல்.
  • வளங்களைப் பகிர்ந்தளித்தல்

   போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றர். எனவே  ஆரோக்கியமானதும், உயர் மட்டத்தில் கல்வி அடைவை எய்துவதற்கும் சமூகப் பணியாளர்களின் தேவை பரவலாக உணரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நீங்களும் ஒரு பள்ளிச் சமூகப் பணியாளராக உருவாவதற்கு வாழ்த்துக்கள்.

தாஹிர் நூருல் இஸ்ரா
உதவி விரிவுரையாளர்,
தேசிய கல்வி நிறுவகம்.
மகரகம
21/10/2019

உசாத்துணை
Perera , M. A. N. R . (2010) School Dropouts in Sri Lanka: A Sociological Analysis. Perera Department of Sociology and Anthropology, University of Sri Jayewardenepura.

Friday, 29 March 2019

Why they are calling her as Women - ஏன் அவளை மகளீர் என்கிறார்கள்


ஏன் அவளை  அவர்கள்மகளீர் என்கிறார்கள்?

அவள் விரலும் மனமும்
அவனுக்கு மென்மை என்பதாலா
அவர்கள் அவளை மகளீர் என்கின்றனர்.

விரல் இடுக்கில்
சரிந்து விழும்
சாரல் போல் கோலமிடும்
குழல் பிடித்து
நெருப்பு மூட்டும்
குலப் பெண் என்பதாலா
அவர்கள் அவளை மகளீர் என்கின்றனர்.

அவன் மகவுக்கு தாயாகி
தாய்பாலை வீரமாக்கி
அவனை வளர்பதனாலா
அவர்கள் அவளை மகளீர் என்கின்றனர்.

கரு அறை எனும்
சுவர்கத்தை சமந்து திரிபவள்
கருனை மொழியால்
அவனுக்கு எல்லாமாகி
உருகும் மெழுகு திரியவள்
புரியவில்லை
அவர்கள் ஏன் அவளை மகளீர் என்கின்றனர்?

08/03/2019 women's day poem for Suriyan FM,

Needs your time -வேண்டுவதெல்லாம் உன் நேரம்

வேண்டுவதெல்லாம் உன் நேரம்

ஓய்வு
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

சூரியன் பகலிலும்
சந்திரன் இரவிலும்
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

அலை கரையுடனும்
கரை அலையுடனும்
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

ஒளிரும் நட்சத்திரங்களும்
ஓடும் இதயமும்
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

விரிந்த தரையும்
உயர்ந்த மரங்களும்
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

ஓடும் ஆறும்
பாயும் நீர்வீழ்ச்சியும்
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

பாலாய் போன
பல்தேசிய கம்பனிகளால்,
இரவெல்லாம் விழித்து
பகலெல்லாம் உறங்கும்
மனிதர்கள்

முழு உருவமும்
முன்னே இருந்தாலும்
பேசத்துடிக்கும் உதடுகளும்
கனத்த இதயங்களும்
எல்லாம் இருந்தும்
எதுவும் இல்லாத
இல்லாலாய் வாழும்
அத்தனை உறவுகளுக்கும்
ஓய்வு தேவை

வேண்டாம் உன் பணம்
வேண்டுவதெல்லாம் உன் நேரம்.

20th March 2019 - Vahavam








Saturday, 7 July 2018

அருள்வாக்கியின் மண் (Soil of Arulvakki Abdul Kadhar)




புற்று மண் எடுத்து
வரிச்சி வீடு கட்டி
பிள்ளை வளர்த்த மண்ணே
எங்கள் மண்

சோற்று பருக்கை இன்றி
ஆற்று நீரை அள்ளி குடித்து
உண்டி வளர்த்த மண்ணே
எங்கள் மண்

அடை மழையில்
குடையும் இன்றி
குடை பிடிக்க வழியுமின்றி
சாக்கு கோணியுடன்,
கடை தெருவுக்கு போகும் மண்ணே
எங்கள் மண்

விளையாட்டு சாமான் இன்றி
மானா குச்செடுத்து
கணக்கு பாடம் படிக்கும் மண்ணே
எங்கள் மண்.
லோடா கம்புடைத்து
கிட்டி விளையாடி
கூட்டாஞ் சோறு சமைக்கும் மண்ணே
எங்கள் மண்

பாக்கு மட்டை பொறுக்கி
தோப்பு முழுக்க இழுத்து
வம்பு கதை பேசி மகிழும் மண்ணே
எங்கள் மண்

தென்னை மட்டை வெட்டி
மாடு என அழைத்து
கழுத்தில் கயிறு கட்டி குறும்புதனமாய்
குறுபான் கொடுக்கும் மண்ணே
எங்கள் மண்

துளிர்த்த மூன்றிலை
தேயிலை நுனியில் தொங்கும்
புனித் துளி கொண்டு
கண் துடைக்கும் மண்ணே
எங்கள் மண்

சாரத்தை மண்டி கட்டி
மலை மலையாய் அணிவகுத்து
தேயிலை கொழுந்து எடுத்து
விரல் முழுக்க கசறு படிந்து
எங்கள் உழைப்பை
உங்கள் சுவைக்காய்
அரப்பணிக்கும் மண்ணே
எங்கள் மண்

படிப்படியாய் வரம்பு கட்டி
குளத்து நீரை அதில் வடித்து
படிமுறை விவசாயம் செய்யும்
பட்டினியை போக்கும்
பாட்டாளியின் மண்ணே
எங்கள் மண்

மலை இடுக்கில் ஒழிந்து
காலையில் கள்ளமாய்
எங்கள் வெண்புறாக்களை
எட்டிப்பார்க்கும் கிழக்கு கதிரவன்
அவன் பொல்லாத கள்ளன்

அவன் மென் கதிர்பட்டு
பனித்துளி வெட்கி
அவள் ஜாலம் காட்டும்
வானவில் தோன்றும்
மொட்டாவை மலையது
எங்கள் மண்

மஞ்சள் முழாம் பூசி
அணி அணியாய்
புல்லு மலைக்கு
ஹஜ் பயணம் செல்லும்
வண்ணத்து பூச்சியிடம்
எங்கள் பிரார்த்தனைகளை
அள்ளி வைத்து
அல்லாஹ்விடம் சொல்லி
நல்லது நடக்க வேண்டும்
என வேண்டும் மண்ணே
எங்கள் மண்

அந்த புல்லு மலையின்
சொந்த காரன் தான்
இன்றைய வகவத்தின் பாடு பொருள்
பாட்டாலே விளக்கேற்றி
பாட்டாலே விளக்கணைத்த
அருள்வாக்கி அப்துல் காதர்
பிறந்த மண்ணே
எங்கள் மண்

பெயரில்லா பாடசாலை ஒன்று
இலங்கை தேசத்தில் உண்டோ
பூவும், காயும்,
கனிதரும் மரமும்,  மணம் தரும்
வாசனை திரவியமும் பெயராகுமோ?
சிங்களப் பெயர் தழுவிய
தமிழ் மொழி பாடசாலை ஒன்று சாத்தியமோ
அந்த புலவர் மலையில் சாத்தியமே
அதன் நுழைவாயிலே வித்துவ தீபமே

எனசல் கொல்ல எனும் பாடசாலை
பெற்றெடுத்த கவி குஞ்சு நான்
பிறந்த மண் அது.
புலவனுக்கும் எனக்கும் உள்ள
உறவு தெரியாது
எங்கள் ஊரில் பிறக்கும்
எந்த குழந்தைக்கும்
இந்த புலவனை தெரியாது இருந்ததில்லை.

நான் இப்போதெல்லாம்……

கொங்கிரீட் காட்டிற்குள்
காணாமல் போன
கதிரவனை தேடுகிறேன்

வானவில்லின் நிறங்களை
மறந்து விட்டேன்.

பனிதுளியில் பட்டு தெறிக்கும்
வர்ணஜாலத்தை சிந்திக்கிறேன்.

இறந்து போன  வண்ணத்துப் பூச்சிகளிடம்
என் எண்ணத்தை சொல்கிறேன்.

தொலைபேசிக்குள் தொலைந்து
என் நேரத்தை சேமிக்கிறேன்.

ஜில் என்ற காற்றை, ஏசி ஏசி
விலை கொடுத்து வாங்குகின்றேன்

பிளாத்திக்கு போத்தலுக்குள்
சின்ன புல்லுகளை வளர்க்கின்றேன்.

என் மண்ணையும்
அதன் மண் வாசனையையும்
குப்பை நிறைந்த என்
அடுப்பறை நினைவுபடுத்துகின்றது.

பிழைப்புக்காய் கொழும்புக்கு    
ஹிஜ்ரத் வந்துள்ளேன்
என் மண்ணை
ஹஜ்ஜதுல் விதா போன்று
சென்றடைய ஆசை வைத்துள்ளேன்.

என் மண்ணின் மைந்தர்களிடம்
நான் மன்னிப்பு கேட்கிறேன்.
எமக்கு ஒரு பாரிய பொறுப்புண்டு

அருள்வாக்கியை கூகுளில் தேடினேன்
மேமனுக்கு கிட்டிய படம்கூட
அங்கு இல்லையே எனவருந்துகிறேன்.

ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி
நாடறிந்த புலவன் - எங்களின்
அடையாள புருஷன் - அவனை
உலகறிய செய்வது
எனதும் உனதுமான கடமை

வகவத்திற்கு நன்றி
வகவ குடும்பத்திற்கு நன்றி
அன்றொரு நாள் விடுத்த வேண்டுகோள்
இத்தனை விரைவில் நிறைவேறும்
என்று நினைக்கவில்லை
செவிமடுத்த உங்கள்
அனைவருக்கும்
அருள்வாக்கியின் மண்ணின் மைந்தனின்
வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

31/01/2018, Presented on 45th Vahavam
By: Thahir Noorul Isra

Wednesday, 4 July 2018

Rat box of Asifa (ஆசிபாவின் எலிக் கூடு)






என் வீட்டை சுற்றி
ஓரு சுத்திகரிப்பு
ஆதலால் எலி எல்லாம்
எம் வீட்டுக்குள்.

என் எஜமானை நச்சரித்து
ஓர் எலி கூண்டு வாங்கினேன்
பத்திரமாய் கதவை அடைத்து
புத்தியாய் ஒரு கருவாட்டை சுட்டு
கொண்டியில் கொழுக்கி – மாட்டட்டும்
என் மானத்தை அம்பலம் ஏற்றிய
ஆசாமி என்று நினைத்துக் கொண்டேன்

அப்போதுதான் உற்றுப் பார்த்தேன்
இப்போதெல்லாம் எலிக் கூடு கூட
தனி கூடாகி போனதே.

முன்பெல்லாம் வெளி அரங்கில்
“டக்”; என்று அம்பலமாகும்
கொலைகள் - கள்ளன் யார் என்று
அம்பலமாய் தெரியும்.


இப்போதெல்லாம்,
தனி கூட்டிற்குள்
இரத்தம் சிந்தாமல்
கொலை செய்யப்படாமல்
சித்திரவதை இல்லாமல்
கல்லன் பிடிபடுகிறான்.

அவன் அவமானப்படாமல்,
தனிமையை உணராமல் இருக்க
இடைக்கிடையே ஒரு சொட்டு நீரும்,
நெத்தலி தலையும்
எனக்கு தெரியாமல்
அதனோடு ஏதேதோ பேசுகிறான்
என் வீட்டு எஜமான்.

குதிரையின் கடிவாளம் பிடித்து
அன்பு தங்கை படிக்க உருதுணைசெய்து
தாய்கு பணிவிடையும் செய்து
குலப் பெண்ணாய் வாழ்ந்தாள்
என் தங்கை ( ஆசிபா) அவளுக்கு,

ஓர் எலிக் கூண்டு கூட
பாதுகாப்பாக இல்லாது போனதே....
அப்போது தான் புரிந்தது எனக்கு
கடிவாளம் பிடிக்க தெரிந்தாள் போதாது
தன் கற்பை காக்கும்
கடிவாளத்தையும் பிடிக்க வேண்டும் என்பது.

29/04/2018
Presented in Vahavam

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...