என் வீட்டை சுற்றி
ஓரு சுத்திகரிப்பு
ஆதலால் எலி எல்லாம்
எம் வீட்டுக்குள்.
என் எஜமானை நச்சரித்து
ஓர் எலி கூண்டு வாங்கினேன்
பத்திரமாய் கதவை அடைத்து
புத்தியாய் ஒரு கருவாட்டை சுட்டு
கொண்டியில் கொழுக்கி – மாட்டட்டும்
என் மானத்தை அம்பலம் ஏற்றிய
ஆசாமி என்று நினைத்துக் கொண்டேன்
அப்போதுதான் உற்றுப் பார்த்தேன்
இப்போதெல்லாம் எலிக் கூடு கூட
தனி கூடாகி போனதே.
முன்பெல்லாம் வெளி அரங்கில்
“டக்”; என்று அம்பலமாகும்
கொலைகள் - கள்ளன் யார் என்று
அம்பலமாய் தெரியும்.
இப்போதெல்லாம்,
தனி கூட்டிற்குள்
இரத்தம் சிந்தாமல்
கொலை செய்யப்படாமல்
சித்திரவதை இல்லாமல்
கல்லன் பிடிபடுகிறான்.
அவன் அவமானப்படாமல்,
தனிமையை உணராமல் இருக்க
இடைக்கிடையே ஒரு சொட்டு நீரும்,
நெத்தலி தலையும்
எனக்கு தெரியாமல்
அதனோடு ஏதேதோ பேசுகிறான்
என் வீட்டு எஜமான்.
குதிரையின் கடிவாளம் பிடித்து
அன்பு தங்கை படிக்க உருதுணைசெய்து
தாய்கு பணிவிடையும் செய்து
குலப் பெண்ணாய் வாழ்ந்தாள்
என் தங்கை ( ஆசிபா) அவளுக்கு,
ஓர் எலிக் கூண்டு கூட
பாதுகாப்பாக இல்லாது போனதே....
அப்போது தான் புரிந்தது எனக்கு
கடிவாளம் பிடிக்க தெரிந்தாள் போதாது
தன் கற்பை காக்கும்
கடிவாளத்தையும் பிடிக்க வேண்டும் என்பது.
29/04/2018
Presented in Vahavam
No comments:
Post a Comment