பூக்காலம்
உச்சம் தொடும்
உன் கவிதைகளில்
எச்சம் உண்டா
என தேடி
என் பேருந்து புரப்பட்டது.
மிச்ச பக்கங்களை புரட்ட
உன் பூக்காலத்தில்
எஞ்சியதெல்லாம் ஒன்றிரண்டுதான்.
உச்சம் தொட்ட வரிகளில்
ஊசலாடும் உன் உயிர்
உதிரம் வடிக்க
என் பேனா மையதை
பதிவிடத் துடிக்கிறது.
“ஈன்றெடுத்த பச்சை வயிற்றில்
பெற்றோல் ஊற்றி
தீவைத்தது போல”
உன் கவி வரிகள்
என் உதிரத்தை உரிஞ்சி குடித்தது.
“வலிதனிப்பும் நிவாரணமும்”
என்பதை நீ அறிந்திருக்க மாட்டாய்
என்பதை நன் அறிந்திருப்பதனால்
உன்னை ஆவணமாக்க
ஆசைப்படுகிறேன்
நீ அனுமதிக்கும் பட்சத்தில்.
கடைசி நிமிடங்களை
கணித்துக்கொண்டிருக்கும் விரல்களில்
கவிஞன் ஒருவன் கடத்தும்
தரமான வாழ்க்கை தரம் பற்றி
தவறாது பாடம் எடுக்க வேண்டும்
மானுடம் பாடும் தரணியிலே.
அன்புடன்
கவிதாயினி,
தெல்தோட்டை இஸ்ரா
28-03-2017
No comments:
Post a Comment