Tuesday, 28 March 2017

Quality doughter

அருளாளன் அன்பாளன்,
ஆதாரம் அல்லாஹ்வே
அலிபும் அகரமும்
நன்றே சொல்லி
ஆன்று பல கல்வி
ஈன்றே தந்து
தாளாய் சொர்கம்
மனையில் கொண்டு
மன்னறை வாழ்கை
மகத்தாய் பெற்று
ஈன்றே பேறு
வையகம் தந்து
உற்றம் சுற்றம்
தந்தாய் ரப்பே
அல்ஹம்துலில்லாஹ்

தவமாய் தவமிருந்து
தசாப்தம் கடந்து
தாயம்மா தரணியிலே
ஈன்றெடுத்த
தலைச்சம் பிள்ளை
நானம்மா –அவளின்
தரமான தங்கமகள்

தாலாட்டு அவள் பாட
தாடியிலே நானட– பாச
தாகத்தால் விக்கித்து
தாயென்றார் என் தந்தை
தயவாய் என்னை நோக்கி

மழலை சொல்மாறி
சீராய் கைபிடித்து
சீமைக்கு செல்லையிலே
அவர் கையிருந்த
சிகரட்டை தட்டிவிட
சினத்தோடு எரிந்துவிட்டார்
அவர் ஆறாம் விரலை
புன்முறுவள் பூத்தாள்
என் தாயம்மா
தரமான அவள் மகளின்
தீரச் செயல் கண்டு

ஏட்டறிவு எதுவுமில்லை
எழுத்தறி சிறிதுமில்லை
ஏனியாய் எனக்கிருந்து
ஏற்றிவிட்டு தான் மகிழ்ந்தார்.
பட்டங்கள் அத்தனையும்
பக்குவமாய் அள்ளிவர
அவையிலே முன்னிருந்து
அற்புதமாய் பார்த்திருந்தார்.

பட்டதாரி ஆக்கிடவே
பட்டினியில் பல நாள்
பசியோடு அவரிருந்தார்
பாழாய் போனது
பாசமிகு அவர் உடம்பு

பாத்திருக்க முடியாமல்
பாத்திரத்தில் நீரும்
பத்திரமாய் மருந்துடன்
தரமான தாதியானேன்
தங்க மகள் நான் அவருக்கு

பட்டங்கள் நான் பெற –அவர்
பட்ட துயர் கொஞ்சமில்லை
அரைஞான் கையிர் முதல்
அரை பவுன் சங்கிலி வரை
அத்தனையும் பத்திரமாய்
அடைக்கலம் வங்கியிலே

இருக்குமிடம் தெரியவில்லை
இல்லை என்று சொல்வதில்லை
பத்தியிலே பர்வதம்
பக்குவத்தில் குறையுமில்லை

பள்ளியிலே முதலிடம்
பன்பிலே உயர்விடம்
யார் பெற்ற பிள்ளையென
யாரும் கேட்டிடவே
மார்போடு அனைத்து
மார்தட்டி  சொல்லிடுவார்
கண்மனியில் நீர் வடிய

காலத்தால் பெற்ற பிள்ளை
தான் பெற்ற பெற்றொருக்கு
கையிலே செல்போனும்
காதிலே இயர் போனும்
காலமெல்லாம் - மிச்ச
காலமெல்லாம் அன்புடனே
வாழவென
கனவு இல்ல  மொன்று
இழந்துவிட்ட அத்தனையும்
இரட்டிப்பாய் கொடுத்திடவே
அவள் ஆயள் நீடிக்க பிரார்திக்கின்றார்
அல்லாஹ்வை கேட்கின்றார்
அறிவுரைகள் பகர்கின்றார்

அன்னிக்கு தோழியாய்
கொழுந்தனுக்கு தாயாய்
மாமிக்கு மகளாய்
மாமனாருக்கு புதல்வியாய்
புகுந்த வீட்டை
பிறந்த வீடாய் மாற்றிடு மகளே
எங்கிருந்தாளும் நீ
என் தரமான தங்க மகளே.



No comments:

Post a Comment

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...