Wednesday, 30 September 2015

பிச்சி போட்ட ரொட்டி துண்டுகள். Pieces of Rotty (Special poem for Aged Day 2015)


பிச்சி போட்ட ரொட்டி துண்டுகள் 


ஊரிய ஊறுகாயாய் தினம்
ஊமை வாழ்க்கையும்,
வட்டாரத்து வாழையாய் தினம்
வெட்டி வீசப்படுதலும்,
சமூகத்து நியதிகளாய் தினம்
சரித்திரத்து சுவடுகளும்,
நாளைய நாற்றுகளாய் தினம்
நினைக்கும் முதிர்க் கொம்புகளும்
காய்ந் தோலை விழச்சிரிக்கும்
குருத்தோலையாய் நீயும்
சறுகிப் போனாய்.

பழுத்த பழத்தை மரம்
என்றோ ஒருநாள்
விழுத்தத்தான் வேண்டும்.

காய்ந்த இலையை மரம்
என்றோ ஒருநாள்
சிலிர்க்கத்தான் வேண்டும்.
செறிந்த மலரை மரம்
என்றோ ஒருநாள்
விழுத்தத்தான் வேண்டும்.

பூமியில் பிறந்த உயிர்
என்றோ ஒருநாள்
இறக்கத்தான் வேண்டும்.

முதிர் கொம்பான நீயும்
மூச்சடைத்து
மூர்ச்சையாகி போனாய்.

உன் இதயம் துடித்துநிற்கும் -வரை
உன் உயிர் ஊரடங்கும் - வரை
உன் சுற்றம் காத்துகிடந்ததுஏனோ?

சிந்திய வியர்வை
செந்நீராய் சங்கமமாகும் முன்
கண்ணீர் வடிக்கிறது உன்
சுற்றம்.


வாழும் போதே
வாழ்த்தாத உன் சுற்றம்
ஈமைக்கிரியைக்காக
பெட்டியில் அடைத்த பின்பு
பேசும் வீராப்பின் மகிமையை
உன் கண்கள் பார்க்கவில்லையே -என
நான் ஆதங்கப்படுகிறேன்.

உன் மூச்சு காற்றுமட்டும்
உன் தொண்டைக் குழியைவிட்டும்
ஏன் தூரமாகும் வரை சற்றும்
ஆசையாத சுற்றம்
உன் மூச்சடங்க…..

ஓட்டைவீட்டுக்குள்
ஓடிச் சென்று,
ஆளுக்காள் ஏதேதோ
தேடியெடுத்து,

இது என் அம்மாஎனக்கு தந்தது
இது என் ஆத்தாஎனக்கு தந்தது
இது என் பாட்டிஎனக்கு தந்தது
இது என் சித்திஎனக்கு தந்தது
எங்கிருந்து வந்தது
இத்தனைச் சுற்றம்

இப்போ….
உனக்கு மிஞ்சியது
வானவெளியில் கிழித்துபோட்ட
இரவுப்போர்வை

உன்னுடன் தினம் கதைபேசிய
வெற்றிலை செப்பும் - அதன்
உலக்கையும்

உன் வருகைக்காய்
உன் வீட்டுகதவு மூலையில் காத்திருக்கும்
கைப்பிடி

அன்றொருநாள்
அன்னையர் தினத்தில்
அன்பளித்ததகரப் பீங்கானும்
அளவோடு உன் உதடுகளை உரசிப்பார்த்த
கோப்பையும்

எப்படியோ காத்திருந்து
ஊரடைந்த உன்
மரண அத்தாட்சிபத்திரத்தை
பெற்றபின்
தேடியது

மண்ணுக்குள் நீ மர்மமாய்
மரைத்து வைத்திருந்த
மர்ம பெட்டியை

அதற்குள் நீ எழுதியிருந்த
உயிலை
அப்போதே தெரிந்தது அது

சின்னவயதில்
சிட்டுகுருவியாய்
சிறகடிக்கவில்லை என்பது.

புரியாத வயதில்
பட்டாம் பூச்சிகளை
ரசிக்கவில்லை என்பது.

முறையின்றி உன் தாய்
ஓளியறையில்
கருத்தரித்தாள் என்பது.

முகம்பார்த்து உன் தாய்
மார்பங்களில்
பாலூட்ட மறுத்தாள் என்பது.

மயானமான  உன் வாழ்வின்
மர்ம ரகசியங்களை
மர்ம பெட்டிக்குள்
பிச்சி போட்ட ரொட்டி துண்டுகள்
போலிருந்த  
எலி கடித்து மிஞ்சிபோன
கடதாசி துண்டுகள்
பேசியது.

ஆறியாத வயதில்
உனக்கு அடைக்களமான
அனாதை இல்லத்துக்குநீ
விட்டுச் செல்லுவதெல்லாம்
உன் பெயரில் உள்ள
எச்ச சொச்சங்களும்,
சேலை முடிச்சில் -நீ
முடிஞ்சி வைத்திருந்த

ஈமைக்கிரியை பணமும்……

Thursday, 10 September 2015




                          கள்ளி  பால் (11/09/2015)


கள்ளி  பால் கொடுத்து வளர்க்கவில்லை உன்னை
அள்ளி அணைத்து முத்தம் கொடுத்து
ஆழம் வித்தாய் ஆழம் காட்டி
தொட்டில் போட்டதெல்லாம்
திட்டமாய் அவள் அயர்ந்த பின்னும்
மண்ணறையில் ஆழமரமாய் நிழல்தர,

மாண்டுபோன மனிதமும்
மரணித்து மண்ணோடு நாமம் மறைந்த மாந்தரும்
மனிதராய் வலம் வந்த பூமியிலே
நீயும் நானும் வாழ்வது ஒன்று வாழ்வல்ல
மாண்ட மனிதங்களும்
புது ஜீவிகளும்
வாழ்ந்ததும் வாழ துணிவதும்
கேள்விக்குறி,

உலகத்தை சுருக்க
பகீரதப் பிரயத்தனம் செய்த
வாழ்ந்த மனிதனின்
விபரீத விளைவினால்

கூட்டாஞ்சோற்றை மறந்த கூட்டு குடும்பம்
பட்டம் விட்டுபழகிய பள்ளிதோழன்
வசு வண்டியில் அமர்ந்திருந்தாலும்
பேச விடாத தொலைபேசி
காத்து போன வாகன சக்கரத்தை
உருட்டி தட்டி விளையாடிய கைகள்
இன்று,

தட்டியும்
தடவியும்
தம்பப் பன்னியும்
தராளமாய் மூழ்கிப் போகும்
சின்னஞ் சிறுசுகளின்
கையில் கிடைத்திருக்கும் காகித கப்பல்

இரவிலே வீட்டுக்கு அவ்வப்போது வந்து போகும்,
எட்டுகால் பூச்சி
மரணித்து மண்ணறையில் வாழும்
மாமாவையும், வாப்பாவையும், ஞாபகப்படுத்த
எழுந்த மஹ்ரிப் அதானில்
விழுந்து தொழுது யாசீன் ஓதி
அழுது உருகி கேட்ட துஆக்கள்
அழிந்தே போனது சுவடுகள் இன்றி

மஹ்ரிப்கு பிறகு ஊசி வாங்காதே
கடுகு மணியை நிலத்தில் கொட்டாதே
பால கிரி தோசம் என
வெற்றிலை பாட்டிகளின் பரந்த
சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்த
சரித்திர காலத்தில்,

ஏன் ஏன் என கேள்வி கேட்டு
அதனையும்
கூக்குள் செய்யும் நாகரிக சந்ததிகளின்
சாம்ராஜ்யம், இது.
விஞ்ஞானத்தை விலைபேசி
விள்ளங்கமாய் உலகத்தை வலம்வரும்
வருத்தப்படாத வாலிப சங்கம்,

தொட்டதெல்லாம் பாலாய் போகும்
என எச்சி பாட்டி கேட்ட துஆ.
இங்கு
விட்டதெல்லாம் அம்பாய் மாறி
பெற்றவர் நெஞ்சில் பாயும் விபரீத உலகம்.

புத்தகம் வாங்க சல்லி இல்ல என்று எங்க
வாப்பா ஸ்கூல் பக்கமே போகல்லயாம்
ஒற்றை நாணயத்தில் வாங்கிய புத்தகத்தை
ஒரு பரம்பறையே படிச்சிச்சாம்.
அடைமழையில் ரப்பர் சீட் கட்டிகிட்டு
அந்த மழைக்கு அங்கால இருக்கும்
ரலிமங்கொட ஸ்கூலுக்கு போனவங்கள
இன்னக்கும் காட்டிதரும் எங்க உம்மா.
அங்க உக்காந்திருக்க
இந்த மசீதா உம்மாவின்
புத்தக முயற்சியை இப்படி சொல்கிறேன்.

எச்டி எம் எல் லும்
 பி டி எப்
இ. நூலகமும் வளர்ந்த பின்னர்
புத்தக பக்கங்களை திருப்பும்
பிஞ்சு கைகளுக்கு பஞ்சம் வந்திருச்சி
இலத்திரணியல் புத்தகத்தை பாரமில்லாமல்
டெப்புவலி தூக்கி சுமக்கும் நாகரீக உலகம்
இது

உன் பொன்மணி பேழை இன்று
முதுவயது கண்ணியின் கன்னி பிரசவம்
இன்னும் புத்தகங்களை சேகரிக்கும்
எம்மை போன்றோருக்கு
அரும் முத்திரை
எம் பிஞ்சுகளுக்கு அது
எப்படி
என்பது
எனக்கு கவலை தருகிறது.

வாசிப்பு குறைஞ்சிருச்சி என்பதை
யோசிக்க வேண்டியிருக்கு ஏண்டா
இ. வாசிப்பு கூடிபோச்சி எங்க இலசுகளிடம்
அதலால் உன் மேல் கொண்ட காதலால்
உரிமயாய் ஒரு வேண்டுகோல்
உன் பொன்மணிபேழை
இ. நூலக வர ஆவணம் செய்வாய்
என அன்பு தாயிடம்
கெஞ்சி கேட்கும்,
இவள்
தெல்தோட்டை

வானம்பாடி (இரா)

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...