Wednesday, 16 March 2016

A moment with Tawakkul karman in BMICH on 16th March 2016


தவக்குள் கர்மான்னுடன் சில நொடிகள்

அல்ஹம்துலில்லாஹ்

வன்காரி மாத்தாய், மலாலா யூசுப் அலி போன்ற சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற பெண் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை படித்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு தவக்கலுல் கர்மா என்ற ஆளுமை தொடர்பில் அறியக்கிடைத்தது. அரபுலகில் இருந்து பல புனைப்பெயர்களுக்கும் அதற்கே உரித்தான செயல் வீரராகவும் திகழும் தவக்கலுல் கர்மா இலங்கை வருகிறார் என்ற செய்தி எனக்கு தெரிய வந்தது எல்லாம் வெறும் 24 மணித்தியாளங்களுக்குள்ளே. அந்நொடி தொட்டு அவரை காணவேண்டும் அவருடன் அறிமுகமாக வேண்டும் என்று ஓர் எண்ணம் தோன்றியது. அப்போது சமூகவலைதளங்களில் பரவலாக அவர்தொடர்பான தகவல்களும் பகிரப்பட்டுக் கொண்டிருந்தன. பல வழிகளிலும் முயற்ச்சி செய்தேன். சகோதரி நுஸ்ஹாவை தொடர்பு கொண்ட போதே நம்பிக்கை துளிர்விட்டது.

ஆயி~h ஸித்தீக்காவின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொள்வதற்காக வரும் தவக்கலுல் கர்மா அந்நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டபத்தில் இடம்பெறுகின்றது என்பதனையும் அறிந்தேன்…. அது என்னை மேலும் ஊக்கப்படுத்தியது.
என்றாலும்பணிவிடுமுறைகுறுகிய கால அவகாசம்………… முயற்ச்சி…..

இவை எல்லாம் என்னை பலதடவை சிந்திக்க தோன்றியது. சில தொலைபேசி அழைப்புகளுக்கு எனக்கு பதிலே கிடைக்கவில்லை. என்றாலும் அலுவலக நேரம் முடிந்ததும் செல்வதாக முடிவெடுத்தேன்.

இது இவ்வாறு இருக்க, 16.03.2016 காலை என் தொலைபேசி ஓயாது அழைத்தது. அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு அவகாசம் கிடைக்காத போது
தயவு செய்து தற்போதே என்னை தொடர்புக்கொள்ளவும் என்ற குறுஞ்செய்தி கிடைத்தது.”

என் எண்ணங்களுக்கு அல்லாஹ்விடம் இருந்து ஒரு பச்சைக்கொடி அது. உங்களுக்கு ஒரு அனுமதி அட்டை உள்ளது. நீங்கள் வரமுடியும் என்ற செய்தி அது.

இவையெல்லாம் அவற்றின் போக்கில் நடந்து முடிய, அலுவலக நேரமுடிவில் பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டபத்தின், மண்டப இலக்கம்பியை நோக்கி நகர்;ந்தேன்.

சில வேளை காத்திருப்புகள் அவசியமற்றவை….

நிகழ்வு நிறைவுற்று, தேநீர் உபசாரத்திற்காக வெளியே குழுமியிருந்தனர். நான் தெரியாத ஒரு முகத்தை தேடிவந்து தெரிந்த முகங்களை தேடிக்கொண்டிநதேன். ஓர் ஏக்கமும் கவலையும் என்னுள் இழையோடியது.
அப்போது தான் தவக்கலுல் கர்மா வெளியே வந்தார்….

ஓரமாக நின்றுகொண்டிருந்த என்னை கண்டு ஸலாம் கூறியவராக என் தோல்களை தழுவிக்கொண்டார். அவரது அவ் அணைப்பு எனக்கு நிறையவிடயங்களை உணர்த்தியது. ஈமானிய வேட்கை,.. போராடும் குணம்அல்லாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சிக்கொள்…. துணிந்து நில்இறுதிவரை போராடுஎன்ற பாடங்களை கற்றுக் கொண்டேன்.

சுதாகரித்துக்கொண்டு உங்களை சந்திக்கவே நான் இங்குவந்தேன் அனால் இவ்வளவு நெருக்கமாக உங்களை நான் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை என்ற போது மீண்டும் அவர் என்தோல்களை தட்டினார்
.
என்னுடைய அறிமுக அட்டையை கொடுத்து உங்களின் மின்னஞ்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பேன் என்று கூறிய போது, என்னுடைய முழு பெயரையும் கூறி இன்~h அல்லாஹ் என்று கூறியவாக அவர் விடைபெற்றார்.

என்னங்களுக்கே கூலி……….. அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...