முற்று புள்ளி
ஒரு திங்கள்
கடந்து
மறு திங்கள்
பிறையன்று
பெருநாளை
கொண்டாடும்,
முகம்மது நபி
உம்மதே,
உங்களுக்கு ஈத்
முபாரக்.
உண்டி சுருங்கி
தொண்டை தாகித்து
கொண்ட
உபவாசத்திற்கு - இன்று
பரிசளிப்பு விழா –
அல்லாஹ்
நன்மைகளை கொண்டு
பரிசளிக்கும்
விழா.
ஒரு ரமழானில்
ஓடிய குதிரை
மறு ரமழான் வரை
காத்திருக்க
நடத்தையில்
ஏற்பட்ட மாற்றம்
தொடரட்டும்,
என இடுகின்றேன்.
மூன்று
முற்றுப்புள்ளி…
ஆங்காங்கே
அவ்வப்போது
அழுது வடித்து
திருந்திய உள்ளம்
இட்ட
முற்றுப்புள்ளிகளை
ஒரு நிமிடம்
ஓர்மிக்க
நினைக்கின்றேன்.
பிச்சை காரர்களின்
மாதம் - என
கொச்சை
படுத்தப்பட்ட ரமழான்
பிச்சைக்காக்கா
இட்ட சதகாவாள்
கொஞ்சம் வாழ்வு
பெற்றால்
கன்னி பெண்
காமிலா. – ஆகையால்
இடுகிறேன்
முற்றுப்புள்ளி.
இனி யாசகம் இல்லா
இரு ரமழானுக்கு.
வக்துக்கள்
தவறாது,
சப்புக்கள்
குறையாது,
மஸ்ஜித்கள்
நிரம்பியது. –ரமழானில்
ஆகையால்
இடுகிறேன்
முற்றுப்புள்ளி.
இனியும் குறையாது
நிரம்பும்,
சப்புகள் என.
தூசிகள் தட்டபட்ட
குர்ஆனின் மணம்
வீசிய மாதம்
ரமழான்.
பூட்டியே
வைக்கப்பட்ட
தோலைக்காட்சி
பெட்டியின் -நேரம்
சேமிக்கப்பட்ட
மாதம் ரமழான்.
ஆகையால்
இடுகிறேன்
முற்றுப்புள்ளி - இனியும்
தேவைக்கு மட்டுமே
– திறக்கும்
தோலைக்காட்சி
பெட்டி என.
ஆடம்பரத்துக்கும்,
ஆர்பாட்டத்துக்கும்
மூட்டை
கட்டப்பட்ட மாதம் ரமழான்
பட்ஜெட்டுகள்
அதிகரித்து
மிச்ச
சொச்சத்துக்கு கடனும் எடுக்க
வழிகாட்டா மாதம்
ரமழான்.
ஆகையால்
இடுகிறேன்
முற்றுப்புள்ளி - இனி ஒரு
துண்டு விளா
ஈதுல் பித்ருக்கு.
மீண்டும் குதிரை
காணட்டும் ரமழானை
பூண்ட உறுதி
நிலைக்கட்டும் வாழ்வில்
நீண்ட கைககள்
நிரம்பட்டும் உதவட்டும்
முற்றுப்புள்ளிகள்
தொடராது
முற்றுப்பெறட்டும்.
வசந்தத்தின்
வாசலில் தெரிகிறது
பிறை நிலா
தென்றல் காற்றோடு
சொல்கிறது
கவி நிலா
மணிகொரு கவிதை
வந்துங்கள்
உள நிலா தொட
பதிவிட்ட
நண்பனுக்கும்
பரிந்துரைத்த தோழனுக்கும்
நன்றியோடு
வாழ்த்துரைக்கும் இவள்
தெல்தோட்டை ---
(இஸ்ரா)
18/07/2015
வசந்தம் எப்.எம். வானொலி நோன்புப்
பெருநாள் தினமான 18-07-2015
அன்று 1.30 pm க்கு
எனது குரலில் ஒலிபரப்பிய கவிதை
No comments:
Post a Comment