பெண்களுக்கு எதிரான
வன்முறை
ஒழிப்பு
தினம்
2020
பெண்களுக்கு எதிரான
வன்முறைகளினால்
ஏற்படும்;
உளப்பாதிப்புகள்
ஓவ்வொரு வருடமும் நவம்பர் 25 ஆம் திகதி உலக
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது. அரசுகள் தமது நாடுகளில் பெண்களுக்கு
எதிராக இடம்பெறும் வன்முறைகளை குறைப்பதற்கு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன. 1960 ஆம் ஆண்டு நவம்பர்
மாதம் 25 ஆம் திகதி டொமினிக்கன் குடியரசில் மிராபல் சகோதரிகள் என அழைக்கப்பட்ட மூன்று
சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாட்டுக்காக அன்றைய
ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலியோவின் உத்தரவினால் கொலை செய்யப்பட்டனர். பெண்களுக்கு
எதிரான குற்றங்களுக்கு குரல் கொடுத்த அவர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்;முறைகளை குறைப்பதற்கு
சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன
பெண்களுக்கெதிரான வன்முறையை ஆராய்ந்த உலக சுகாதார அமைப்பு
(றுர்ழு), பெண்களுக்கு எதிரான வன்முறை பெண்களின் வாழ்நாளின் ஐந்து நிலைகளில் நடைபெறுவதாக வகைப்படுத்தி
உள்ளது. அது கருவறை முதல்
கல்லறைவரை தொடர்வதனை காணலாம்.
1. பிறப்பிற்கு
முன்னர்
2. மழலைப்
பருவம்
3. சிறுமியர்
4. பருவ
மாற்றம் மற்றும் வயது வந்தோர்
5. முதியோர்
இங்கு ஈன்று கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் பிறப்பதற்கு முன்னிருந்தே பெண்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகின்றது என்பதாகும்.
பெண்களுக்கு எதிரான வன்முறையின் போது, பொதுவாக அவதானத்தை பெறுவது பாதிக்கப்பட்ட நபருக்கு மீள வழிகாட்டுவதும், அவர்களுக்கு
நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி செய்வதும் ஆகும். இதன் போது பாதிக்கப்பட்டவரின்
காலுறைக்குள் எமது கால்களை திணித்து
நோக்கும் போதே அவர்கள் இப்பிரச்சினைக்கு
முகம் கொடுத்திருக்கும் விதமும், அதில் இருந்து மீண்டுவருவதற்கு அவர்கள் எவ்வாறு தனது மனதையும், நடத்தை
கோலத்தையும் மீளக்கட்டியெழுப்பியுள்ளனர் என்பதுவும் தெளிவாக விளங்கும். ஆனால் வன்முறையை மேற்கொள்பவர்களின்
காலுறைக்குள் எமது கால்களை இட்டு
நோக்கும் போது தெளிவாக தெரிவதுதான்
குறித்த நடத்தையினால் கிடைக்கும் மகிழ்ச்சியினால் அதனை எவ்வாறாயினும் அடைந்துக்கொள்ள
முயற்சி செய்துள்ளனர் என்பதாகும். இதன் போது பாதிக்கப்பட்ட
பெண்ணின் மனதிற்கு முதலில் தோன்றுவது நான் மாத்திரமே இந்நிலையில்
இருந்து மீள்வதற்கு முயற்சி செய்கின்றேன், ஆனால் அவர்கள் ஒரு போதும் (திருந்துவதற்கு)
தனது பொருத்தமற்ற அல்லது வன்முறையான நடத்தையை மாற்றிக்கொள்ளவோ அல்லது இழிவாக்கிக்கொள்ளவோ முயற்சிசெய்கின்றனர் இல்லை என்ற விரக்தி எண்ணமாகும்.
வன்முறை நிகழும்போது பாதிக்கப்பட்டவர் தம்மை
தாழ்வாக உணர்தல். தாம் முகங்கொடுக்கும் சூழ்நிலையால்
சக்தியற்ற நிலைக்கு தள்ளப்படல் மற்றும் சூழவுள்ளோரால் தொடர்ந்தும் அவமானப்படுதல் ஆகியன பொதுவானதாகவும் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. இது சுய பழிசுமத்தல்
நிலையை ஏற்படுத்தும். சுய பழிசுமத்தலானது பெண்கள்
உதவியை நாடுவதை தடுக்கும். இவையனைத்துடன் இணைந்து இன்னும் பல காரணிகளும் பெண்களில்
மிகக்குறைவானவர்களே இதனை தமக்கு எதிராக
மேற்கொள்ளப்படும் வன்முறை என்றும் அதிலிருந்து மீள்வதற்கும் புகார் அளிப்பதற்கும் முயற்சி செய்கின்றனர். பெரும்பாலான பெண்கள் இது தமது விதி
எனவும் கருமம் எனவும் கடவுளின் நியதி எனவும் வாழ்ந்துவிட்டு போகவும், வன்முறைகளுக்கு பழக்கப்பட்டு அதனுடனே வாழ்ந்து மறைவதற்கும் தயாராகின்றனர். இதன் போது வன்முறையை
மேற்கொள்பவர்கள் இவர்களை கொலை செய்யவும் துணிந்துவிடுகி;னறர். ஓர் ஆய்வில் 137 பெண்கள்
தமது நெருங்கிய உறவினர்களால் வன்முறைக்குட்படுத்தப்பட்டு நாளொன்றுக்கு உலகளாவியளவில் கொலைச் செய்யப்படுகின்றனர். இன்னும் சிலர் தங்களை காயப்படுத்திக்கொண்டு தற்கொலை செய்துகொள்கின்றனர்.
இலங்கையில் 2016 ஆம் ஆண்டு மேற்கொண்ட
மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் துறையினரால் நடாத்தப்பட்ட ஓர் ஆய்வுக்கமைய 17% பெண்கள் அவர்களின் நெருங்கிய துணையால் உள்ளக வன்முறைக்கு உள்ளாகின்றார்கள் என தரவுகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 20% நகர்புறத்திலும், 16% மக்கள்
கிராமப்புறத்திலும் 17% பெண்கள் தோட்டப்புறங்களிலும்
உள்ளவர்களாவர்.
(https://www.aidsdatahub.org/sites/default/files/resource/srilanka-dhs-2016.pdf)
பெண்களுக்கு எதிரான வன்முறைகளால் பாதிக்கப்படுபவர்களில் அவதானத்தைப்பெறும் குழுக்களாக காணப்படுபவர்கள்.
1. தங்கிவாழ்பவர்கள்
(முதியவர்கள், சிறுவர்கள், முதியவர்கள்)
2. குறைவான
சாட்சிகள் (வீட்டுக்குள்ளேயே சாட்சிகள்)) இருப்பவர்கள்.
3. சமூக
விரோத ஆளுமை.
4. கலாசார
கூறுகள்.
5. கல்வித்தகைமை
மற்றும் விழிப்புணர்வின் அளவு.
6. குறை போசாக்கு மற்றும் நோயோடுள்ள பெண்கள் -
உளநோய்களுக்கு உள்ளானவர்கள்.
7. போதை பாவணைக்கு அடிமையானவர்கள்.
பாலியல்
துன்புறுத்தல்
2017, UNFPA ஆய்வின் பிரகாரம், பொதுப்போக்குவரத்தின் போது 90% பெண்கள் ஏதோவொரு
விதத்திலாவது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இது குறிப்பட்ட இடத்தில்
அல்லது குறித்த காலத்தில் இடம்பெற்றதாக
சொல்லமுடியாமை துரதிஷ்டவசமானதாகும். பாலியல் துன்புறுத்தல்களானவை அலுவலக சூழலிலிருந்து பொது கழிப்பறை வரை
மற்றும் வைத்தியசாலைகளிலும் கூட எந்தவொரு இடத்திலும்
இடம்பெறலாம். பாலியல் துன்புறுத்தலுக்கென
குறிப்பிட்ட குறியீடு ஏதுமில்லை என்பதுடன் யாராயினும் இதில் எளிதாக பாதிக்கப்படலாம் என்பதால், இது இலகுவாக எடுத்துக்கொள்ளக்கூடிய
ஒரு பிரச்சினை அல்ல என்பதனைக் கவனத்திற்கொள்ளுதல்வேண்டும்.
இதன் போது பாதிப்புக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுகின்றனர்.
தனிமைப்படுத்தி வைத்தல் என்பது பெண் பிள்ளைகள் என்ன
செய்கிறார்கள், அவர்கள் யாரைப் பார்க்கின்றார்கள், எங்கு போகின்றார்கள் என்பதனைக் கட்டுப்படுத்துவதற்கும், குறைப்பதற்கும் பயன்படுத்தப்படலாம். அத்துடன் அவர்கள் தமது குடும்ப அங்கத்தவர்களை/நண்பர்களைச்
சந்திக்க தடை விதிக்கலாம்.
வன்புணர்ச்சி (கற்பழிப்பு), பெண்ணொருவரது, பிள்ளை ஒன்றினது பாலியல் உறுப்புக்களில் உடல் ரீதியான தாக்குதல்,
பாதிக்கப்பட்டவர் கர்ப்பத்தடை முறைகளைக் கட்டுப்படுத்தல், பாதுகாப்பான பாலியல் நடைமுறைகளைப் பயன்படுத்துவதைத் தடுத்தல் என்பவற்றை உள்ளடக்கும். வன்புணர்ச்சியானது அவர்களது விருப்பத்திற்கு எதிராக பாலியல் வல்லுறவு கொள்ளுமாறு வற்புறுத்தல் ஆகும். இது பல சந்தர்ப்பங்களில்
வன்முறையுடன் சம்பந்தப்பட்டுள்ளது. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இது தனிப்பட்ட ஒருவரின்
உடல் மீதான உரிமை மீறலாகும்.
இணைய முறைகேடு
இன்று எமது நாளின் முக்கியமான
செயற்றிறனான காலப்பகுதி முழுவதும் இலத்திரனியல் உபகரணங்களுடனும், இணையத்துடனும் கட்டுப்பட்டு இருக்கின்றது. நாம் தொழிநுட்பத்தில் தங்கியிருப்பது
அதிகரிக்கும் வேளையில், நாம் எமக்கிடையிலான தொடர்புகளை
அதிகரித்துகொண்டே வருகிறோம். இவ்வாறான வலையமைப்பானது அனுகூலம் பிரதிகூலம் இரண்டையுமே கொண்டுள்ளது. தற்போதுள்ள பாரிய பிரதிகூலம் என்னவென்றால், தவறான எண்ணம் கொண்ட நபர்கள் மற்றவர்களை இணையவழியால் துஷ்பிரயோகம் செய்ய முடியும், அந்த நபருடன் நேரடி
தொடர்பு இல்லாத போதும் அழுத்தத்திற்கு உட்படுத்தல், தற்கொலை எண்ணத்தை தோற்றுவித்தல் மற்றும் தற்கொலைக்கு உட்படுத்தவும் முடியும் என்பதுதான்.
2017 இல் மேற்கொள்ளப்பட்ட ஊநுசுவு|ஊஊ இனால் ஆய்வில் பதிலளித்தவர்களுக்கமைய 14% தவறாக பயன்படுத்தியும்,
12% இணைய மிரட்டல்களாலும் மற்றும்
3% இணைய மோசடிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு பிரச்சினை யாதெனில், இணைய வழியில் இடம்பெறுவதால்
பலரால் இது
அச்சுறுத்தலாக எண்ணப்படுவதில்லை. எனினும் இணையவழி துஷ்பிரயோகம் என்பது பாரதூரமானதாகும்.
இணைய முறைக்கேடானது, பாதிக்கப்பட்ட
ஒரு நபரின் மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்துவதற்கு மேலதிகமாக பல விளைவுகளை ஏற்படுத்துவதால்
இது அணுவின் விளைவு போன்று பாரதூரமானதாகும். இதில் குறிப்பாக தனிநபர்களின் அறிவுக்குட்படாமல் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை பதிவேற்றம் செய்தல் மற்றும் மிரட்டல், அச்சுறுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கும். துஷ்பிரயோகத்தின் ஓர் அங்கமாக பார்வையில்,
செயலில், அத்துடன் சமிக்ஞையின் மூலம் அவர்களது ஆதனங்களை அழிப்பதன் மூலம் அல்லது ஆயுதங்களை காட்டுவதன் மூலம் பெண்ணை அச்சமடைய வைத்தலை உள்ளடக்கலாம்.
வீட்டு
வன்முறை
வீட்டு வன்முறை என்பது ஒரு குடும்பத்தின் அங்கத்தவர்
வேறொரு குடும்பத்தின் அல்லது அதே குடும்பத்தை சேர்ந்த
உறுப்பினரொருவரை உடலியல், பாலியல், மனவெழுச்சி, உளவியல், சமூகவியல் மற்றும் பொருளாதாரவியல் ரீதியில் கட்டுப்படுத்தல், ஆக்கிரமித்தல் அல்லது துஷ்பிரயோகம் செய்தலைக் குறிக்கும்.
ஒரு பெண்ணின் வகுப்பை,
சாதியை இனத்தை கருத்தில் கொள்ளாது அதே குடும்ப நபர்களால்
அல்லது வீட்டுக்கு வெளியில் உள்ள நபர்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்கள் உடலியல், பாலியல், மனவெழுச்சி, உளவியல், சமூகவியல் மற்றும் பொருளாதாரவியல் ரீதியில் கட்டுப்படுத்தல், ஆக்கிரமித்தல் அல்லது துஷ்பிரயோகம் செய்தலைக் குறிக்கும்.
வீட்டு வன்முறை என்பது பிரதானமாக ஆண்கள் தமது அதிகாரத்தைப் பிரயோகிக்கும்
பொருட்டு பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். வீட்டில்
இடம் பெறும் இல்ல வன்முறையானது, உடலியல்.
பாலியல், வன்முறை அச்சுறுத்தல், பயமுறுத்திக் கட்டாயப்படுத்தல் என பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் கவலைக்குரிய விடயம் யாதெனில் இதற்கு பல சந்தர்பங்களில் உறுதுணையாக
இருப்பது இன்னொரு பெண்ணென்பது கவலைக்குரிய விடயமாகும். வீட்டில் ஆண்ஃபெண் இருவருக்கிடையில் ஏற்படும் உடலியல் துஷ்பிரயோகம், அல்லது மனவெழுச்சி சார்ந்த வன்முறைச் செயலைத் தடுக்கும் சட்டமாகும். இது 2005ம் ஆண்டு, இலக்கம்
34 இல்ல வன்முறைச்செயல் தடுப்புச் சட்டம் என அழைக்கப்படுகிறது.
உடல்
ரீதியான
வன்முறை
ஒருவருடைய உடலுக்கு ஊறுவிளைக்கும் செயல்களான அறைதல், குத்தல், அடித்தல், பலமாகத் தள்ளுதல் எனபன உள்ளடங்கும். ஒரு
பெண்ணை கத்திகள், தடிகள் அல்லது வீட்டில் கிடைக்கக்கூடிய வேறு பொருட்களைக் கொண்டு
தீங்கு விளைவிக்க எத்தனிப்பதையும் உள்ளடக்கும். அதிக கடினமான சந்தர்ப்பங்களில்
ஒரு பெண்னை அச்சுறுத்துவதற்கோ, தீங்கு விளைவிப்பதற்கோ சூடு வைக்கவும் முற்படுகின்றனர்.
உளவியல்
மற்றும்
மனவெழுச்சி
ரீதியான
வன்முறை
உளவியல் ரீதியான வன்செயலானது பயமுறுத்திப் பணம் பறிக்கும் அல்லது
அவமானப்படுத்தும் எண்ணத்துடன் செய்யப்பட்ட அல்லது நிறைவேற்றப்பட்ட எவையேனும் அச்சுறுத்தல்களை உள்ளடக்கும். இதன் போது வேண்டுமென்றே
பாதிக்கப்பட்டவரின் சிந்தனைகளை குறுகவைக்கும் அத்துடன் அவர்களை இழிவாக உணரவைக்கும் எல்லா எத்தனிப்புக்களையும் உள்ளடக்கும். பாதிப்படைந்தவரை ஏனைய மக்கள், குடும்பம்,
நண்பர்கள் முன்னிலையில் வெட்கப்படுத்துதல் ஆகியன அடங்கும்.
பொருளாதாரவியல்
ரீதியான
வன்முறை
நிதியியல் ரீதியில் தங்கியுள்ளமையை உருவாக்குகின்றது. பாதிக்கப்பட்டவரின் பணம் அவரிடமிருந்து துஷ்பிரயோகத்தைச்
செய்பவரால் அபகரிக்கப்பட்டு அவருக்கு ஏதேனும் தேவைப்படும் வேளைகளில் பணத்தைக் கேட்கும்போது அவர் பல துன்புறுத்தலுக்கு
ஆளாக்கப்படுதலைக் குறிக்கும்
வன்முறைக்குள்ளான
பெண்களால்
அனுபவிக்கப்படுகின்ற
உணர்வுகள்
• நம்பிக்கை இழத்தல்
• பதகளிப்பு
• எதற்கும் உபயோகமற்றிருத்தல் என நினைத்தல்
• தன்னையும் குழந்தைகளையும் பற்றிப் பயப்படுதல்
• உணர்வு மரத்துப்போதல்
• பதற்றம்
• திருப்தியின்மை
• குற்ற உணர்வு
• வெட்கம்
• தாங்கள் எதைச் செய்தாலும் ஒரு போதும் சரிவரச்
செய்யவில்லை என்ற தாழ்மை உணர்வு
• தோல்வி
• மீளோட்டம்
விளைவுகள்
பெண்களுக்கெதிரான வன்முறை அபிவிருத்திக்கு ஓரு தடை என்பதனை றொக்ஸானா
காரியோ என்பவர் தெளிவாக சுட்டிக்காட்டி இருப்பதுனூடாக தென்படுவது பெண்களுக்க எதிரான வன்முறையை எந்தளவு முக்கியவிடயமாக கருத்திற்க்கொண்டு அதனை குறைப்பதற்கு முயற்சித்தல்
வேண்டும் என்பது முக்கியம் பெறுகின்றது. குடும்ப பிரிவு, விவாகரத்து, தற்கொலை, நோய்வாய்ப்படல், பிள்ளைகளால் தனித்து விடப்படல், சமூக களங்கம் போன்றன
ஏற்படுகின்றன.
எப்படி
மீள்வது
இந்நிலையில் இருந்து மீள்வதற்கு ஐக்கிய நாடுகளின் பெண்கள் சமவாயம் இவ்வாண்டு 10 முக்கிய விடயங்களை சிபாரிசு செய்துள்ளது. அவற்றில் முக்கியமான விடயமாக இருப்பது வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை நம்புவதும், அவர்களுக்கு செவிமடுப்பதுமாகும்.
1. வன்முறையினால்
பாதிக்கப்பட்ட பெண்களின் கதைகளுக்கு செவிமடுத்து
அவர்களை நம்புதல்
2. அடுத்த
தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்து அவர்களிடம்
கற்றுக்கொள்ளுதல்
3. கேள்விகளுக்கு
பதிலளித்தலும், வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளுதலும்
4. அவர்கள்
பிரச்சினையை பார்க்கும் விதத்தை புரிந்துக்கொள்ளுதல்
(சம்மதத்தை
புரிந்துக்கொள்ளுதல்)
5. துபிரயோகத்தின் அறிகுறிகளையும் அதற்கு எவ்வாறு உதவலாம் என்று
அறிந்துவைத்தல்
6. அவர்களுடன்
உரையாடத் தொடங்கவும்
7. கற்பழிப்பு
கலாசாரத்திற்கு எதிராக நிற்றல்
8. பெண்கள்
அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தல்
9. ஒருவருக்கொருவர்
பொறுப்புக்கூறல்
10. தரவை
அறிந்து அதில் அதிகாமானவற்றை கோருங்கள்
உலகமே ஸ்தம்பித்திருக்கும் கொவிட் -19 அசாதாரண கால சூழ்நிலையில் உலகளாவிய
ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்திருப்பதனை உலக சுகாதார ஸ்தாபனத்தின்
அறிக்கைகளும் புள்ளிவிபரங்களும் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. வீட்டிற்குள்ளே வன்முறைக்குள்ளாகும் பெண்களின்
எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமையும் முறைப்பாடு செய்யமுடியாத சூழ்நிலையும் காணப்படுகின்றது. எனவே இச்சூழ்நிலையில் வன்முறைக்கு
உள்ளாகும் பெண்கள் தொடர்பான விழிப்புணர்வை பெறுவது எமது கடமையாகும். அவ்வாறே
வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் தொடர்பான தகவல்களை அறியப்படுத்துவதும்,
ஆக்கம்:
தாஹிர்
நூருல் இஸ்ரா
உதவி
விரிவுரையாளர்
உட்படுத்தல்
கல்வித் துறை
தேசிய கல்வி நிறுவகம்