மழையே
உன்னை ஆடியில் கேட்டேன்.
நீயோ மார்கழியில் வந்தாய்.
வெயிலில்
காய்ந்து கருவாடாய் இருந்தேன்
நீயோ எனக்கு இரங்கவில்லை
இன்று ஆடி கடந்து
மார்கழியில்
கலியுகமாய்
வெள்ளக்காட்டாறை
தள்ளிவிட்டு
என் சென்னை சொந்தங்களை
வாட்டிவிட்டாய்
பிறப்புக்கும் இறப்புக்கும்,
பிரசவிப்புக்கும் அடக்கத்துக்கும்
மறுக்கிறது மண்
உண்டி ஒட்டிப்போய்
ஊண் மறந்தனர்
என் சொந்தங்கள்
இமைகள் விறைத்து
இமைக்க மறுக்கின்றன
கண்கள்
சிறுநீருக்கும் குடிநீருக்கும்
சிக்கனம் தெரிந்தது
சென்னை சொந்தங்களுக்கு
உதவிக்கு கரங்கள் ஆயிரம்
அவற்றை சேர்க்க ஆயிரந்தடை
உதிரம் கொடுக்க தயார்
உள்ளம் துடிக்கிறது
என் சொந்தங்களையெண்ணி
என்னால் நலம் விசாரித்து
ஆண்டவனை தொழவே முடிகிறது.