Tuesday, 27 January 2015

The Clock - கடிகாரம் (Part-1)

The Clock - கடிகாரம்

பாகம் - 1


தமிழ் நாளைக்கு ஸ்கூல் போகனும்….
ட்ரஸ் அயன் பண்ண குடுக்கனும் எப்ப ரெண்டு பேரும் போக போரிங்க…., 
என்ற தாயின் கட்டளை நிறைந்த அன்பு குரல்தான் இறுதியாக என் தாய் என்னுடன் பேசிய இறுதி வார்தைகள்,

அரவிந்தின்  மனஓட்டம் அந்த நாளை நோக்கி நகரத் தொடங்கியது. 
அன்று அது ஒரு சனிக்கிழமை ஜந்தே வயது நிரம்பிய நானும் என் அக்காவும் 4 மைல் தொலைவில் உள்ள அயனிங் அண்ணனிடம் சென்றோம், 

கைகோர்த்து வீதியோரம் முழுதும் விளையாடிச் சென்ற அந்த நாள் இன்று வரையும் திரும்பி வரவே இல்லை.

வழி முழுவதும் கண்ணாம்பூச்சி விளையாடிய என் சின்ன பிராயம் எனக்கு மட்டுமல்ல என் அக்காவுக்கும் அது போன்றே என்தங்கைக்கும் திரும்பி கிடைக்கவேயில்லை. 

அன்று தொடங்கிய அம்மாவாசை………….
இன்று வரையும் ஒரு பௌர்னமியும் என் வாழ்வில் தோன்றவே இல்லை
ஏன்…………..

வீடு வந்து சேர்ந்த போது காத்திருந்தது….
கும்மலாக கூடியிருந்த அயலவர்கள்…
கருகிய ஒரு வாடை
அனைவரையும் தாண்டி வீட்டிற்கு சென்றேன்…
அம்மா கருகிய சேலையுடன் படுத்துக்கிடந்தாள்

“ஏய் நல்லாவே இல்ல, இந்த மாதிரியா எல்லாரும் பார்க்க படுத்திருப்பாங்க?”
எனக்குள்ளே எண்ணியவாறு வீட்டுக்குள் சென்று டீவி (வுஏ) பார்க்க ஆரம்பித்தேன்.

எல்லோருமாய் வந்து திட்ட ஆரம்பித்தும் எனக்கு எதுவுமே புரியவில்லை….
சினிமா சீரியல்க்கு படம் எடுக்குறாங்கண்டு நினைச்சிக்கிட்டேன். 

போலீஸ், அம்புயுலன்ஸ் என்று வீட்டின் முன் குவிந்தாலும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை…

கார்டூன் பார்த்துட்டு இருந்தேன்…

சில மணிக்கூறுகளுக்கு பிறகு அக்காவின் அடக்கமுடியாத அழுகையும் தேம்பலும் 
என்னை ஏதோ செய்தது,
அவளிடம் “ஏன்கா அழுற” என்று கேட்ட போதுதான்,……..

அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுகிட்டதும்,
அப்பாவ பயமுறுத்த அம்மா மண்ணென்னைய ஊத்தினதும்,
அப்பா தீகுச்சிய கிழிச்சி அம்மா மேல போட்டதும் தெரியவந்தது.
அப்போதும் என்னால் அதனை நம்ப முடியவில்லை
அழுகையும் வரவில்லை…

அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட என் அம்மா????
மூன்று நாட்கள் போராடி இறந்து போனாங்க.

நாட்களும் வருடங்களும் ஒரு போலவே நகர்ந்து போயின
அன்றோடு எங்கள் வாழ்வில் அஸ்தமித்த சூரியன் 
இன்றுவரை உதிக்கவே இல்லை

என்வாழ்வில் இத்தனை நாள் மட்டும் ஒளியாக இருந்த பக்கங்கள்
இன்று தொட்டு இருளாக மாறும் என்று நான் எண்ணிகூட பார்க்கவில்லை
கூடு கலைந்தாலும் குடும்பமாக வாழும் பறவைகளைவிட 
கூடும் இன்றி குடும்பமும் இன்று சிதறி போனது எனது சின்ன குடும்பம்

தாய்பால் மறக்காத என் தங்கை??????
விளையாட்டு பருவத்தில் என் அக்கா?????????
கைவிடப்பட்ட நான் ????????????

என் அப்பா கோவக்காரர் தான், 
வீட்டுக்கு வந்ததும் என்னை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு கதை கேட்பாரு…..
நானும் யாரு இன்னக்கி என்ன பண்ணினாங்கண்டு சொல்வேன்
பொய் பேசவே மாட்டேன்
அதனாலே எங்கம்மா ஏன் கூட கோவம்.

அக்காவும் நானும் அடிக்கடி சண்டை போடுவோம்
ஆனா அவ என் கூட அன்பா நடந்துகுவா,
பாட்டி வீட்டுக்கு போறது ரொம்ப பிடிக்கும்,

அம்மா இருக்கும் வரைக்கும் நாங்க இளவரசனும் இளவரசிகளும் தான்
ஆனா அம்மா எப்ப எங்கள விட்டுட்டு போனாங்களோ அன்னகி போச்சி எல்லாம்……
எங்க அம்மாவ நான் ரொம்ப மிஸ் பன்றன்….

ஏன்மா நீ அப்பாகூட சந்தோசமா இருக்கனும்டு இந்த முடிவு எடுத்த
ஏங்ககூட இருந்தா போதும்டு நினைச்சிருந்தா,,,,,,,,,
எங்க கப்பல் கரை சேர்ந்திக்குமா…….
கடல் நீர்லயும் வானவில் தோன்றியிருக்குமா,,,,,,,,,,

உன்னை பிரிந்த பின்புதான்மா நான், 
இந்த உலகத்தை புரிஞ்சிக்க முடிஞ்சிச்சிமா……….
சின்ன வயசுல என்வாழ்கையின் அத்தியாயங்களை நான் திருப்பி பார்க்கறத்துக்கான 
நேரம் வந்திருச்சி….

விடியும் நாட்களில் நான் கண்திறந்து பார்பேனா என்று தெரியாது,
என் வாழ்கையில் ஒவ்வொரு நாட்களையும் எண்ணிகிட்டு இருக்கேன்.
நிரந்தரமற்ற வாழ்கையில அன்பு என்ற ஒன்றுதான் உன்னை
இழந்தது திரும்பி வர போவது இல்லை
இருப்தை மகிழ்வோடு வாழபழகிகிட்டேன்…..

என் அத்தியாயங்களை திரும்பி பார்க்கும் போது,…..
கவலை எனும் மேகம் சூழ்ந்திருக்கும்
அது வழியே வாழ்கையை புரிஞ்சுகிவிங்கண்ட நம்பிக்கையோடு
உங்களோடு பேச பிரயாசித்தப்படுறேன்…
மீண்டும் சந்திக்கலாம்

அன்புடன் 
உங்களுடன் பேசும் உள்ளம்










#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...